தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்த சமய எச்சங்களாகக் காணப்படுபவை ஒரு கல்வெட்டும், புத்தர் சிலைகளும், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் ஆகும். விகாரங்கள் இருந்ததற்கான சான்றுகள் எவையும் இப்பகுதியில் காணப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம் (திருக்கோயில்பத்து) , கோபிநாதப்பெருமாள்கோயில் , சோழன்மாளிகை , திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம் , பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி உள்ளிட்ட இடங்கள் புத்தர் சிலைகள் உள்ள/இருந்த இடங்களாகும். இவற்றில் சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், மதகரம், மாத்தூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலைகள் அருங்காட்சியகங்களில் உள்ளன. நின்ற நிலையிலுள்ள நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் கலைக்கூடத்திலும், அமர்ந்த நிலையிலுள்ள நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்ற பெயரில் வழிபாட்டிலும் உள்ளன. இவ்வகைத் திருமேனிகள் சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்திலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெரண்டாக்கோட்டையில் சாம...