ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி) : முனைவர் க. ஜெயபாலன்
வாழ்த்துரை முனைவர் க. ஜெயபாலன் எழுதியுள்ள ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி) என்னும் நூல், தமிழ்ப் பண்பாடு மற்றும் பௌத்தப் பண்பாடு என்ற அடிப்படையில் கலை, இலக்கியம், மொழி, பண்பாடு, தத்துவம், சமயம், சிற்பவியல், கட்டடவியல், கல்வெட்டுகள், மருத்துவம், மொழிபெயர்ப்பு போன்ற தலைப்புகளில் மட்டுமன்றி ஊர்ப்பெயராய்வு, திராவிடம், வழிபாட்டு நெறிகள், ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் ஆளுமைகள், பண்டைக்கால அரசியல் மற்றும் வாழ்வியல், அயலக இலக்கியம், அயலகப்படைப்புகள், இவையனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் உண்டான தாக்கங்கள் என்ற பல்வேறு தளங்களில் ஒப்புநோக்கு நிலையிலும், கூர்ந்து ஆராயும் நிலையிலும், ஒன்றுக்கும் பிறிதொன்றுக்குமான தொடர்பினை இயைபுபடுத்தியும் வேறுபடுத்தியும் காட்டும் நிலையிலும் 100 தலைப்புகளைக் கொண்டுள்ளது. மொழி என்ற நிலையில் தமிழும், சமயம் என்ற நிலையில் பௌத்தமும் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றைத் தம்முள் கொண்டுள்ளன. பல மாறுபட்ட பொருண்மைகளை ஆழ்ந்து நோக்கும் ஆசிரியர் இரு பெரிய தலைப்புகளில் மிக முக்கியமானவற்றையத் தெரிவு செய்து...