Buddhist Monuments in the Chola's country : Principal Millar Endowment Lecture 2021-22
(அழைப்பிதழில் 2021 என்றுள்ளது) 9 மார்ச் 2022இல் சென்னைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடத்திய முதல்வர் மில்லர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கலந்துகொண்டு பொழிவினை நிகழ்த்தினேன். இணையவழி நடைபெற்ற இப்பொழிவின் சுருக்கத்தைப் பகிர்கிறேன். சோழ நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் கற்சிலைகள் உள்ளன. அவை பெரும்பாலும் 10 முதல் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அவற்றிலும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள சிலைகளே அதிகம். நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவே. புத்தர் சிலைகள் தமிழ்நாட்டு அருங்காட்சியகங்களிலும், பொதுவிடங்களிலும் உள்ளன. சிலைகளில் சில தலையின்றி உள்ளன. சிலவற்றின் தலைப்பகுதி மட்டுமே உள்ளன. சில இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது. புத்தரைப் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கின்றனர். புத்தமங்கலத்திலும், பெருஞ்சேரியிலும் புத்தர் கோயில்கள் உள்ளன. சில கோயில்களில் புத்தர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன. பூம்புகாரில் விகாரையின் எச்சங்கள் இன்னும் உள்ளன. நாகப்பட்டின விகாரை இருந்ததற்கான எச்சத்தைக் காணமுடியவில்லை. நாகப்பட்டினத்தில் விகாரை இருந்ததாகக் கூற...