அருமொழி விருது 2021
வரலாற்றுத்துறையில் சிறப்பான பங்காற்றி வருபவர்களை ஊக்கமூட்டும் வகையில் சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் பேரரசர் இராஜராஜர் பெயரால் அருமொழி விருது என்ற விருதினை வழங்கி கௌரவிக்கின்றது. அவ்வகையில் இந்த ஆண்டு வரலாற்று இளம் ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர். களப்பணியாளர். வரலாற்றுப்புதினங்கள், வரலாற்று ஆய்வு நூல்கள், வரலாற்றுக் கண்டுபிடிப்புகள், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வரலாற்றுக்குழு, வரலாற்று இணையதளம், தேவாரத்திருமுறை, சமண பௌத்த ஆய்வு, தமிழ் மரபு, வரலாற்று புகைப்படக்கலைஞர், வரலாற்றுப் பணியில் வாழ்நாள் சாதனையாளர் என்று பல பிரிவுகளில் 36 விருதுகளை வழங்கியது. 2021ஆம் ஆண்டிற்கான அருமொழி விருதினை பௌத்த மரபு ஆய்வாளர் என்ற பிரிவில் இச்சங்கம் எனக்கு வழங்கியுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 26 டிசம்பர் 2021இல் தஞ்சாவூர் அருகில் உள்ள மானாங்கோரையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினைப் பெற்றேன். அருமொழி விருது, 2021 சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கத்தின் தலைவர் திரு என். செல்வராஜ் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ...