பௌத்த சுவட்டைத் தேடி : எழுமகளூர்
2022 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரை பதிவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. "இரத்த சம்பந்தமான வியாதிகளை நீக்கும் அற்புதத் திருத்தலம்" என்ற (கடம்பூர் விஜயன், தினமணி, 14 ஆகஸ்டு 2018) கட்டுரையில் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் (கொல்லுமாங்குடிக்கு முன்னதாக வலது புறச்சாலை) எழுமகளூர் என்ற ஊர் சப்தகன்னிகளுக்காகப் பெயர் பெற்றது என்று படித்தேன். இக்கோயிலைப் பற்றி எவ்வித பதிவும் விக்கிப்பீடியாவில் இல்லாததால் அதனைப் பற்றி கட்டுரை எழுதுவதற்காக விவரங்களைத் திரட்ட அவ்வூரை நோக்கிப் பயணித்தேன். தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் சென்று, அங்கிருந்து புதூர் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தில் ஏறினேன். வழக்கம்போல பேருந்தில் ஏற ஆரம்பித்த முதல் உரிய இடத்திற்குச் சென்று சேரும் வரை செல்லும் இடங்களில் எல்லாம் அங்கு ஏதாவது புத்தர் சிலை இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே சென்றேன். கிளியனூர் நிறுத்தத்தில் இறங்கி அங்க...