பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் புத்தமங்கலம்

டிசம்பர் 1999 என் ஆய்வின்போது மேற்கொண்ட களப்பணியில் புத்தமங்கலம் என்ற பெயரில் மூன்று ஊர்களைக் காணமுடிந்தது. முனைவர் பட்ட ஆய்வினை அளித்த காலகட்டத்தில் இவற்றில் கீழ்வேளூர் அருகில் உள்ள புத்தமங்கலத்தில் ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். இச்சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் 'புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி' என்ற சொற்றொடரைக் காணமுடிந்தது. இப்பெயரில் உள்ள ஊர்களில் இங்கு மட்டுமே புத்தர் சிலை உள்ளது. செப்டம்பர் 2021 1999க்குப் பின்னர், முன்னர் பார்த்த அச்சிலை மறுபடியும் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் வழியாக கீழ்வேளூர் சென்று அங்கு தேரடியை ஒட்டி அமைந்துள்ள சாலையில் புத்தமங்கலத்திற்குச் சென்றேன். சுமார் 2 கி.மீ. தூரம்.முந்தைய களப்பணி நினைவிற்கு வந்தது. அப்போது சிறிது தூரம் சேறும் சகதியுமாக நடந்து போகச் சிரமப்பட்டுச்சென்றேன். இப்போதும் சற்றொப்ப அதே அனுபவம். ஒரு கி.மீ. நடந்து சென்றபின், அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் நடக்க சிரமப்பட்டேன். வழக்கம் போல சிலை உள்ள இடத்தை விசாரித்தபோது அனைவரும் "வ...