Posts

Showing posts from October, 2021

பௌத்த சுவட்டைத் தேடி : விடையபுரம்

Image
24 செப்டம்பர் 2021 முனைவர் மீ.மருதுபாண்டியன் (காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், மதுரை மற்றும் திருவாரூர்) அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு புதூர் புத்தரைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.  25 கிமீ மிதிவண்டியில் பயணித்து, அந்த புத்தர் சிலையை 1999இல் கண்டதையும் , தொடர்ந்து அச்செய்தி நாளிதழ்களில் வெளியானதையும் கூறினேன். அந்த புத்தரைப் பற்றிய பதிவு இருப்பதறிந்து மகிழ்ந்தார்.  அப்போது அவர் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் விடையபுரத்தில் என்ற இடத்தில் ஒரு புத்தர் சிலை இருந்ததாகவும், தற்போது அச்சிலை குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறினார். அச்சிலையை இன்னும் பார்க்கவில்லை என்று கூறி முடிப்பதற்குள் அதன் புகைப்படங்களை அனுப்பிவிட்டார்.  புகைப்படத்தைப் பார்த்ததும், அதனை அனுப்பியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அச்சிலையை இதுவரை நான் பார்க்கவில்லை என்று கூறினேன். "நீங்கள் பார்க்காத ஒரு சிலைகூட உண்டா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்து, நான் கூறவில்லை. நீங்கள் பார்க்காத சிலை என்று தெரிந்திருந்தால் உங்களுக்கு தெரிவித்து இருப்பேன். சோழ நாட்டில் பௌத்தம் என...