தஞ்சை பௌத்தச் சுவடுகள்

(இ-வ) எம்.தினேஷ்குமார், மகேந்திரன், பா.ஜம்புலிங்கம், சி.குணசேகரன், கே.விசாகன் (இ-வ) பா.ஜம்புலிங்கம், எம்.தினேஷ்குமார், குணசேகரன், ஜான் அடால்ப் கோகஸ், கே.விசாகன் 10 மார்ச் 2020 அன்று தஞ்சாவூர் சுழற்சங்கத்தில் (Rotary Club of Thanjavur) "தஞ்சையில் பௌத்தச்சுவடுகள்" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தத்துவம், இலக்கியம் என்பதற்கு மாறாக களப்பணியில் அடியெடுத்து வைக்க முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கருத்து கூறியது. 1993இல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலைகள், காட்சிப்பேழையில் உள்ள நாகப்பட்டின புத்தச்செப்புத்திருமேனியைக் கண்டது. பல சிலைகளை ஆரம்பத்தில் புத்தரா சமணரா என்று அறிந்துகொள்ள இயலா நிலையில் சிரமப்பட்டது. அய்யம்பேட்டையில் வழிபாட்டில் இருந்த ஒரே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்டது. மூல அனுமார் கோயில் பின்புறம் இருந்த சமணர் சிலையை முனைவர் வீ...