Posts

Showing posts from October, 2019

பௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்

Image
அண்மையில் மேற்கொண்ட களப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இராஜேந்திரசோழன் அகழ்வைப்பகம் சென்றபோது, முந்தைய களப்பணிகளின்போது கண்ட அங்கிருந்த புத்தர் சிலைகளைக் காணச் சென்றேன். அங்குள்ள காட்சிப்பேழையில் உள்ள புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா? கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா என்பதைத் தெளிவு செய்யவே இப்பதிவு.      வலங்கைமான்புத்தூர் புத்தர் அகழ்வைப்பகத்தில் மூன்று புத்தர் சிற்பங்கள் உள்ளன. அவற்றில்  காட்சிப்பேழையில் இருந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்ற குறிப்போடு இருந்தது. அதனடிப்படையில் ஆய்வேட்டில், உரிய நூல் மேற்கோளோடு கீழ்க்கண்டவாறு பதிந்தேன்: "புத்தர் : தஞ்சை மாவட்டம் வலங்கைமான்புத்தூரிலிருந்து சேகரிக்கப்பட்டது. பத்மாசனத்தில் தியான முத்திரையில் காணப்படுகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பண்டைய நாளில் வலங்கைமான் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று இருந்ததையும், அச்சமயம் பரவி நின்றதையும் இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது. இதன் உயரம் 27 செமீ அகலம்15 செமீ (இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம், ஆசிரியர்கள் மா....