பௌத்த சுவட்டைத் தேடி : திருப்பராய்த்துறை
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது திருப்பராய்த்துறையில் முதன்முதலாகக் காணப்படுகின்ற புத்தர் சிலையாகும். திருப்பராய்த்துறை புத்தர் புத்தர், திருப்பராய்த்துறை, கி.பி.10ஆம் நூற்றாண்டு, என்ற குறிப்புடன் அந்த சிலை உள்ளது. திருப்பராய்த்துறை புத்தர் சிலைக்குப் பின்புறம் பிரபை உள்ளது. மார்பில் ஆடையும், தலையில் தீச்சுடரும் உள்ளன. முகம் தெளிவாகத் தெரியவில்லை. வழக்கமாக புத்தர் சிலைக்குள்ள பிற கூறுகள் இதில் உள்ளன. ஆய்வாளர் திரு க.ரவிக்குமார், திருச்சி அருகேயுள்ள திருப்பராய்த்துறையைச் சேர்ந்த புத்தர் சிலையைப் பற்றிய பதிவு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளதாகக்கூறி, புகைப்படத்தைத் தந்தார். களப்பணியின்போது ஆங்காங்கே காணப்படுகின்ற சில விடுபாடுகள் ஆய்வின் முக்கியமான பல தரவுகளைச் சேகரிப்பதில் குறைகளைத் தரும் என்பதை உணர்த்தியது திருப்பராய்த்துறை புத்தர் சிலை. ஆய்வின்போது களப்பணி மேற்கொண்டபோது பெரும்பாலும் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளைச் சார்ந்த அர...