பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் பேட்டைவாய்த்தலை

திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் வயலில், அடையாளம் தெரியாத வகையில் முகம் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது பேட்டவாய்த்தலையில் இருந்த இரண்டாவது புத்தர் சிலையாகும். செப்டம்பர் 1998இல் அச்சிலையை திருச்சி-கரூர் சாலையில் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். அப்போது அப்பகுதியில் முன்பு மூன்று சிலைகள் இருந்ததாகவும், இரண்டு சிலைகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும் சிலர் கூறினர். கோயிலின் முன்பாக இருந்த சிலை திருச்சி, அரசு அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டது பற்றி முந்தைய பதிவில் கண்டோம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு ( Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district ), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார், பேட்டைவாய்த்தலையைச் சேர்ந்த மற்றொரு புத்தர் சிலையைப் பற்றிய பதிவு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளத...