Posts

Showing posts from January, 2019

நாளிதழ் செய்தி : சுந்தரபாண்டியன்பட்டனம் புத்தர் : 2002

Image
2019 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2019 முதல் ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.  என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றி. 1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது கீழ்க்கண்ட புத்தர்சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.   1.மங்கலம் (1999) 2.அய்யம்பேட்டை (நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி) (1999) 3.புதூர் (2000) 4.கோபிநாதப்பெருமாள்கோயில்(2002)  (தலையின்றி) 5.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்) (நாளிதழில் வெளிவரவில்லை) 6.குடவாசல் (2002) 7.சுந்தரபாண்டியன்பட்டனம் (2002) 8.திருநாட்டியத்தான்குடி (2003) 9.உள்ளிக்கோட்டை (2005) 10.குழுமூர் (2006) 11. ராசேந்திரப்பட்டினம் (2007) 12.வளையமாபுரம் (2007) 13.திருச்சி(2008) 14. கண்டிரமாணிக்கம் (2012) 15. கிராந்தி (2013) 16.மணலூர் (2015)  மேற்கண்டவற்றுள் குடவாசல் புத்தர் வரையிலான நாளிதழ் செய்திகளைப் பார்த்துள்ளோம். இப்பதிவில் சுந்தரபாண்டியன்பட்டினத்தில் 2002இல் கண்ட புத்தர் சிலையைப் பற்றி ந