Posts

Showing posts from May, 2013

Buddha statues found during field study (1993-2012) - Thanjavur district

Image
After registering for my M.Phil., in Madurai Kamaraj University during 1993 I decided to visit the Buddha statues exhibited in museums. After seeing the Buddha statues of the Chola country in Thanjavur Art Gallery, Tamil University Museum, Chennai Government Museum and State Archaeology of Government of Tamil Nadu,  I was in search of the Buddha statues which were identified by other scholars. During field study I came to know that some of the statues were missing.  During such a field work I got information about   two new granite Buddhas and one Nagapattinam bronze Buddha.         AYYAMPET  (1999) Nagapattinam Buddha bronze in Ayyampet (1999)  Photo: Dr B Jambulingam After registering  for my research, I started searching Nagapattinam Buddha bronze. Since 1856 more than 350 Buddha bronze statues were found in Nagapattinam. They are exhibited in various museums in and outside India. Though I searched for such a bronze Buddha since 1993, I could able to identify one Buddha

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) - தஞ்சாவூர் மாவட்டம்

Image
1993இல் ஆய்வில் அடியெடுத்துவைத்தபோது முதன்முதலாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிலைகளைப் பார்க்க முடிவெடுத்தேன். தஞ்சாவூர் கலைக்கூடம், தமிழ்ப்பல்கலைக்கழக அருங்காட்சியகம், சென்னை அரசு அருங்காட்சியகம், தஞ்சாவூர் தொல் பொருள் ஆய்வுத்துறை ஆகிய இடங்களில் சோழ நாட்டைச் சேர்ந்த புத்தர் சிலைகளைப் பார்த்தபின் முந்தைய அறிஞர்கள் கூறியிருந்த சிலைகளைப் பார்த்தேன். அவற்றில் சில சிலைகள் தற்போது காணப்பெறவில்லை. இவ்வாறான பயணத்தின்போது ஆங்காங்கே விசாரித்துக்கொண்டே சென்றபோது புதியதாக இரு புத்தர் கற்சிலைகள் மற்றும் ஒரு புத்த செப்புத்திருமேனியைப் பற்றிய தகவல்களைப் பெற முடிந்தது.        அய்யம்பேட்டை (1999) அய்யம்பேட்டை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி (1999)  புகைப்படம் ஜம்புலிங்கம் ஆய்வுக்காகப் பதிவு செய்தபோது களப்பகுதியில் புதியதாக நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டேன். நாகப்பட்டினத்தில கி.பி.1856லிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்ளாட்டு அருங்காட்சியகங்களிலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும