பௌத்த சுவட்டைத் தேடி : சந்தைதோப்பு, நாகப்பட்டினம் மாவட்டம்
27 ஆகஸ்டு 1998 வேதாரண்யம் பகுதியில் களப்பணி சென்றபோது நாகை வேளாங்கண்ணி சாலையில் வீரன்குடிகாடு என்னுமிடத்தில் புத்தர் சிலைகள் இருப்பதாக களப்பணியின்போது அறியமுடிந்தது. 2 007 களப்பணியின்போது நாகை வேதாரண்யம் சாலையில் பரவைக்கு முன், தென்பொய்கைநல்லூருக்கு மேற்கே கருவேலங்கடை என்னுமிடத்தில், புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். 1 மே 2013 மேற்கண்ட இடங்களுக்குக் களப்பணி செல்ல எண்ணியிருந்தபோது நாகப்பட்டினம் பகுதியில் புத்தர் சிலைகள் இருப்பதை அறியமுடிந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராந்தியிலும், சந்தைத்தோப்பிலும் புத்தர் சிலைகள் இருப்பதாக திரு க.இராமச்சந்திரன் தந்த தகவலின் அடிப்படையில் அவருடன் களப்பணி மேற்கொண்டு இரு சிலைகளையும் பார்த்தோம். கிராந்தி புத்தரைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்துள்ளோம். அதே நாளில் நாங்கள் பார்த்த மற்றொரு புத்தர் சிலை வேளாங்கண்ணி அருகே ( நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சாலையில் வேளாங்கண்ணிக்கு சற்று முன்பாக ) சந்தைத்தோப்பு என்னுமிடத்தில் இருந்த தலையில்லாத புத்தர் சிலையாகும். அமர்ந்த நிலையில் 32" உயரமும், 22" அகலமும் கொண்ட சிலையி...