தஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா
"தஞ்சையில் சமணம்" நூலினை வெளியீட்டமைக்காக நூலாசிரியர்கள் என்ற நிலையில் எங்களை தஞ்சாவூர் கரந்தட்டாங்குடியிலுள்ள ஆதீஸ்வரசுவாமி கோயில் எனப்படுகின்ற ஜினாலயத்தில் சமணப்பெருமக்கள் பாராட்டினர். தஞ்சை ஜினாலய அறங்காவலர் திரு ச.அப்பாண்டைராஜ் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. திரு தஞ்சை வி.சுகுமாரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். பஞ்சகல்யாணப்பெருவிழா, கோயில் ஆண்டு விழா, நூலாசிரியர்களுக்குப் பாராட்டு விழா என்ற முப்பெரும் விழாவாக 5 ஆகஸ்டு 2018 அன்று நடைபெற் நிகழ்வின்போது சமணப்பெருமக்களும் அறிஞர்களும் எங்களையும், களப்பணியின்போது நாங்கள் மேற்கொண்ட சிரமங்களையும் சுட்டிக்காட்டி எங்களுடைய முயற்சியைப் பாராட்டி, எங்களை கௌரவித்தனர். அவர்கள் எங்களைப் பாராட்டிய விதம் எங்களை நெகிழ வைத்துவிட்டது. அப்பாண்டைராஜ் தலைமையுரையாற்றுகிறார். மேடையில் பா.ஜம்புலிங்கம், மணி.மாறன், வி.சுகுமாரன், தில்லை கோவிந்தராசன் (இடமிருந்து வலமாக) பத்மமாலினி நன்றியுரை ஏற்புரையில் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு எங்கள...