தஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்
தஞ்சையில் சமணம் நூலின் ஆசிரியர்களில் ஒருவராக அமைந்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். சமணம் தொடங்கி, சமணர்களின் வரலாறு, பழக்க வழக்கங்கள், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சமணத்தின் தாக்கம், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்ற கண்ணோட்டத்தில் அமைந்துள்ள இந்நூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். வெளியீட்டாளர் முகவுரையிலிருந்து : "..........இத்தகு சிறப்புமிக்க தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பல சிற்றூர்களில் புதைந்தும், சிதைந்தும், காடுகளுக்கிடையில் கிடந்தவைகளையும் களப்பணியின் வாயிலாகக் கண்டறிந்து நாளிதழ்களில் அச்செய்திகள் வெளியாயின. இப்பணியில் முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன், மணி. மாறன் ஆகியோர் சேர்ந்தும், தனியாகவும் ஈடுபட்டு சேகரித்த செய்திகளை "தஞ்சையில் சமணம்" என்னும் இந்நூலின் வழியே தமிழ்ச்சமூகத்திற்கு வழங்கியுள்ளனர்......... " (ப.1) மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி ஜைன மடத்தின் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகளின் ஆசியுரையிலிருந்து : ".......... ...