கோயில் உலா : தஞ்சாவூர் மாவட்ட சமணக்கோயில்கள்
28 மே 2018 அன்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணக் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு திரு அப்பாண்டைராஜன், திரு மணி.மாறன், திரு தில்லைகோவிந்தராஜன் உடன் ஆகியோருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முன்னரே இக்கோயில்களுக்குச் சென்றிருந்தபோதிலும் சில மாற்றங்களை இக்கோயில்களில் காணமுடிந்தது. நாங்கள் எழுதி வெளிவருகின்ற தஞ்சையில் சமணம் நூலுக்காக செய்திகளைத் திரட்டும் வகையில் இவ்வுலா அமைந்தது. கும்பகோணம் சந்ர ப்ரப பகவன் ஜினாலயம் கும்பகோணத்தில் சந்ரப்பிரப பகவான் சமணக்கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் கருங்கற்கலால் வடிக்கப்பட்டுள்ளது. தூண் அமைப்பும், நிலைக்கால் மேலுள்ள பகுதியும் சோழர் கட்டுமானப்பகுதியிலிருந்து எடுத்து வந்து அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நுழைவாயில், 2014 தற்போதைய களப்பணியில் மணி.மாறன், தில்லை. கோந்தராஜன், அப்பாண்டைராஜன் கருவறையில் மூலவர் சந்திரப்பிரபா திருமேனி வெள்ளைப் பளிங்குக்கல்லால் உள்ளது. மூலவர் கருவறை கட்டுமானம் தாராசுரம் சோழர் காலத்து கட்டுமானத்தை ஒத்துத் திகழ்கிறது. இக்கட்டுமானத்திற்கான கற்கள் அனைத்தும் இடிபாடுற்ற...