சமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலரில் செய்தியாக வெளியானதும், அது ஒன்றே தற்போது சான்றாக இருப்பதும் மறக்க முடியாத அனுபவமாகும். 28 மார்ச் 2003 தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் பூதலூரைச் சேர்ந்த திரு வீரமணி பூதலூர் பகுதியில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினார். ஆய்வின்போது பல நண்பர்களும், அறிஞர்களும், மாணவர்களும் இவ்வாறாக உதவி செய்து வந்துள்ளனர். அவ்வகையில் அவர் கூறிய புத்தர் சிலையைப் பார்க்கத் தயாரானேன். 1 ஏப்ரல் 2003 மறுநாளே அச்சிலையைப் பார்க்கலாமென முடிவெடுத்தோம். அதன்படி அவருடன் அடஞ்சூர் சென்றேன். பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூரிலிருந்து 5 கிமீ தொலைவில் சிவந்தி திடல் அருகே உள்ள அடஞ்சூர் உள்ளது. சிவந்தி திடல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள காத்தவராயன் கோயில் எனப்படும் நல்லகூத்த அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையிலான சிலையைக் காண்பித்தார். அருகில் உள்ளோர் அச்சிலையை புத்தர் என்றனர். ஆனார் அது சமண தீர்த்தங்கர...