Posts

Showing posts from January, 2018

Coromandel: A Personal History of South India : Charles Allen : என் ஆய்வு மேற்கோள்

Image
2018 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2018 முதல் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சோழ நாட்டில் பௌத்தம் ஆய்வினை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 1999இல் அளித்தது முதல் என் ஆய்வேடு பல இடங்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டு வருவதைக் கண்டுள்ளேன். தற்போது நூல் பணியில் ஈடுபட்டபோது சில விவரங்களைத் தேடியபோது இணையதளத்தில் என் ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளதை காணமுடிந்தது.  இதற்கு முன்பு பல இடங்களில் என் ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த போதிலும் இந்த நூலில் பௌத்த ஆய்வினைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டேன். 1993இல் ஆய்வினைத் தொடங்கி சுமார் கால் நூற்றாண்டுகளாக இத்துறையில் ஆய்வு செய்து வரும் சூழலில் இதுபோன்ற மேற்கோள்கள் என் ஆய்வின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதை அறிகிறேன். Charles Allen எழுதியுள்ள Coromandel: A Personal History of South India என்ற நூலில் (Little Brown Book Group, London, 2017) 1993 முதல் நான் மேற்கொண்டுவருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வு, கண்டி...