சார்லஸ் ஆலன் நூலில் மேற்கோள்

2018 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2018 முதல் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


சோழ நாட்டில் பௌத்தம் ஆய்வேட்டினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அளித்தது முதல் என் ஆய்வு பல இடங்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டு வருவதைக் கண்டுள்ளேன். நூலாக்க முயற்சியில் ஈடுபட்டு, சில விவரங்களைத் தேடியபோது இணையதளத்தில் என் ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளதைக் கண்டேன்.

இதற்கு முன்பு பல இடங்களில் என் ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த போதிலும் இந்த நூலில் பௌத்த ஆய்வினைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டேன். 1993இல் ஆய்வினைத் தொடங்கி சுமார் கால் நூற்றாண்டுகளாக இத்துறையில் ஆய்வு செய்து வரும் சூழலில் இதுபோன்ற மேற்கோள்கள் என் ஆய்வின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதை அறிகிறேன்.

சார்லஸ் ஆலன் எழுதியுள்ள (Charles Allen, Coromandel: A Personal History of South India (Little Brown Book Group, London, 2017) நூலில் 1993 முதல் நான் மேற்கொண்டுவருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வு, கண்டிரமாணிக்கத்திலும், கிராந்தியிலும் புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு, 60க்கு மேற்பட்ட புத்தர் சிலைகள் இக்காலகட்டத்தில் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல செய்திகள் காணப்படுகின்றன.




என் முனைவர் பட்ட ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்படுவதற்கு முன்பாக பௌத்தம் தொடர்பாகக் கீழ்க்கண்ட கூறுகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
  • 1850களில் நாகப்பட்டின புத்த விகாரையின் நிலை
  • முதன்முதலாக, விகாரை இருந்த இடத்தில் ஐந்து புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு
  • 350க்கும் மேற்பட்ட நாகப்பட்டின புத்தர் சிலைகள் நாகப்பட்டினத்தில் கண்டுபிடிப்பு
  • செல்லூரில் 45க்கும் மேற்பட்ட 2004இல் புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு


முனைவர் ச. பூபதி எனக்கு மேற்கண்ட நூலின் பக்கத்தை அனுப்பியிருந்தார். அதில் இரண்டாவது பத்திக்கு புகைப்படத்தின் குறிப்பாக "Dr Jambulingam kneels by a damaged torso of the Buddha found in January 2015 in a field of sugarcane in the village of Manalur, near Thanjavur." என்று இடம் பெற்றிருந்தது. 
-------------------------------------------------------------------------------------------
நன்றி: Charles Allen/Coromandal A Personal History of South India (நூலில் மேற்கோள்)
-------------------------------------------------------------------------------------------

26 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.  

Comments

  1. மகிழ்ச்சியான செய்தி. தங்களுக்கு எனது பாராட்டுகள்.

    ReplyDelete
  2. முனைவர் அவர்களின் ஆய்வுப்பணிக்கு எமது சல்யூட் தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. பிப்ரவரி 2018 முதல் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
    தங்களது எழுத்துப் பணிக்கு எனது பணிவான வணக்கமும்,
    கனிவான வாழ்த்துகளும்!
    நன்றி ஐயா!

    ReplyDelete
  5. You have left no stones unturned.
    Hats off.

    ReplyDelete
  6. மகிழ்ச்சியான தகவல்
    எழுத்துக்குக் கால எல்லை கிடையாது
    தொடர்ந்து எழுதுங்கள்
    தொடர்ந்து வர நாம் இருக்கிறோம்

    ReplyDelete
  7. மிக மிக மகிழ்ச்சியான செய்தி முனைவர் ஐயா! வாழ்த்துகள்! பாராட்டுகள்! எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்...

    ReplyDelete
  8. இந்த ஆசிரியர் எழுதிய அசோகர் புத்தகத்தை மொழி பெயர்த்திருக்கிறேன். படிக்கும்போதே மேலும் மேலும் படிக்க ஆவலைத் தூண்டும் வண்ணம் எழுதியிருப்பார். ஒரு முறை அவரை நேரிலும் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் தமிழ்நாட்டைப் பற்றியும் எழுதியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆய்வுகளுக்கு என் பாராட்டுகள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. கற்றாரை கற்றாரே காமுறுவர் உங்கள் புகழ் பரவ வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  12. தங்களால் தமிழ் மண்ணுக்கு பெருமை கூடுகிறது ஐயா.

    ReplyDelete
  13. மின்னஞ்சல் வழியாக (ahimsawalk@gmail.com)
    வணக்கம் ஐயா,
    தங்களால் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை.
    அகிம்சை நடைக்காக
    வி. சசிகலாதேவி

    ReplyDelete

Post a Comment