23ஆவது பௌர்ணமி பெருவிழா

சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மகாபோதி பௌத்த சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் என் வலைத்தளத்தினை தொடர்ந்து வாசித்து வருவதாகவும், நான் குறிப்பிட்டுள்ள பெரண்டாக்கோட்டை புத்தரைக் காணவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து, அந்த இடம் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தனர். அவர்கள் வரும்போது நானும் அவர்களுடன் வந்து அந்த புத்தர் சிலையைப் பார்க்கவேண்டும் என்றும் கேட்டிருந்தனர். என்னுடைய சொந்தப் பணிகள் காரணமாக நான் வர இயலா நிலையைத் தெரிவித்திருந்தேன். அவர்கள் குழுவாக அங்கு சென்று பெரண்டாக்கோட்டையிலுள்ள புத்தரைப் பார்த்து வந்த அனுபவங்களை என்னிடம் தெரிவித்தனர். தொடர்ந்து 3 நவம்பர் 2017இல் அவர்களுடைய சங்கத்தில் நடைபெறவுள்ள 23ஆவது பௌர்ணமிப் பெருவிழாவில் கலந்துகொண்டு என் பௌத்த ஆய்வு தொடர்பாக சிறப்புரையாற்றும்படி அழைப்பு விடுத்தனர். குறுகிய கால இடைவெளியில் நண்பர்களுக்குத் தெரிவிக்க இயலா நிலையில் நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் மட்டுமே தெரிவித்திருந்தேன். அவர் நிகழ்விற்கு வந்ததோடு அதனைப் பதிவாகத் தன் தளத்தில் படங்களுடன் பதிவிட்டிருந்தார். திருச்சி BHEL மகாபோதி சங்கத்...