Posts

Showing posts from August, 2017

புத்தம் சரணம் கச்சாமி : சாக்யா ஈ.அன்பன்

Image
புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் சுருக்கமாகக் கொண்டுள்ள நூல் திரு ஈ.அன்பன் அவர்கள் தொகுத்துள்ள "புத்தம் சரணம் கச்சாமி " . 2005இல் நூலாசிரியர் அன்பளிப்பாக தந்த இந்நூலை மறுபடியும் அண்மையில் வாசித்தேன். புத்த தம்மத்தை அறிய விரும்பும் புதிய ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்குமாக இந்நூல் தொகுத்து வழங்கப்படுவதாகக் கூறுகின்றார் தொகுப்பாசிரியர். 11 அத்தியாயங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்நூல் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல துணைத் தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. புத்தரின் வாழ்க்கை  முதல் பேருரை நான்கு உன்னத வாய்மைகள் எண் மார்க்கம் புத்தரின் சமய பரப்புப்பணிகள் புத்தரின் ஆளுமை புத்தரின் அன்றாட செயல்பாடுகள் புத்தரின் பரிநிப்பானம் (மறைவு) திரிபீடகம் கம்மா, நல்வினை, தீவினை மனித ஆளுமையின் பகுப்பாய்வு பவுத்த வாழ்முறை சமூகப் போதனைகள் பவுத்தம் போற்றிய தமிழர்கள்  ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சில பயிற்சிக் கேள்விகளும், சிறு குறிப்பு வரைக என்று சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. படித்ததை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளவும் தம்மை சோதித்துக் கொள்வதற்கும் வாசகர்களுக்க...