பௌத்த சுவட்டைத் தேடி : அய்யம்பேட்டை
ஆய்வுக்காகப் பதிவு செய்தபோது களப்பகுதியில் புதியதாக நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டேன். ஒரு நாகப்பட்டினபுத்தர் செப்புத்திருமேனியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1993இல் இறங்கியபோதும், அவ்வாறான ஒரு திருமேனியைக் காணும் வாய்ப்பு 1999இல் கிடைத்தது. எங்கள் கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது நாளிதழ் செய்தியாகும். (முதல் செய்தி மீசை புத்தரைப் பற்றியது) அய்யம்பேட்டை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி (1999) புகைப்படம் ஜம்புலிங்கம் நாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அய்யம்பேட்டையில் தனியாரிடம் வழிபாட்டில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். அமர்ந்த நிலையில், தரையைத் தொட்ட கோலத்தில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்ற...