பெரம்பலூர் திரு இரத்தினம் ஜெயபால் வருகை
ஆகஸ்டு 2016இல் ஒரு நாள். பெரம்பலூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. திரு இரத்தினம் ஜெயபால் (மின்னஞ்சல் jayabalrathinam@gmail.com ) என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். என் பௌத்த ஆய்வு தொடர்பான வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருவதாகவும், தான் எழுதவுள்ள நூல் தொடர்பாக என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். பிற நாள்களில் அலுவலகப்பணி என்ற நிலையில் அரசு விடுமுறை நாள்களில் மட்டுமே அறிஞர்களையும், நண்பர்களையும் ஆய்வு தொடர்பாக சந்தித்து வரும் நிலையில் வாய்ப்பான ஒரு விடுமுறை நாளில் வரும்படி கூறினேன். ஓய்வு நேரம் ஆய்வு நேரமே. திரு இரத்தினம் ஜெயபால் உடன் ஜம்புலிங்கம் (இல்ல நூலகத்தில்) இருவருக்கும் வசதியான 15 ஆகஸ்டு 2016 அன்று வருவதாகக் கூறி, அன்று வந்திருந்தார். பேரூராட்சியில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரை பெரம்பலூர் வட்டார வரலாறு தொடர்பாக நூல் எழுதவுள்ளதாகவும், பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செய்திளைப் பற்றி அறிய விரும்புவதாகவும் தன் ஆவலை வெளிப்படுத்தினார். பெரம்பலூரைத் தலைநகராகக் ...