பௌத்த சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்
டிசம்பர் 1996 1993இல் பௌத்த ஆய்விற்குப் பதிவு செய்த முதல் பௌத்தம் தொடர்பான விவரங்களைக் குறித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நண்பர் திரு நா. ராமகிருட்டிணன் (சிறப்பு நிலைத் தட்டச்சர்) திருநாகேஸ்வரம்- திருவிடைமருதூர் அருகே சன்னாபுரம் என்ற ஊருக்கு அருகில் புத்தர் சிலை உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள் என்றும், திருநாகேஸ்வரம் ராகுஸ்தலம் எனப்படும் கோயிலில் நான்கைந்து புத்தர் சிலைகளோ, சமணர் சிலையோ இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். சன்னாபுரம் சென்று சிலைகளைத் தேடினேன். எங்கும் சிலை இல்லை. சமணபுரம் என்பது சன்னாபுரம் ஆகிவிட்டது என்று அப்பகுதியில் கூறினர். போதிய நேரமின்மையால் திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. ஆகஸ்டு 1998 காலை மன்னார்குடிக்கு சமணக்கோயிலுக்குப் பயணித்தேன். அங்கிருந்த புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது திரு ஜெ.சந்திரமோகன் அறிமுகமானார். அவர், கூறிய செய்திகளில் ஒன்று திருநாகேஸ்வரம் சிவன் கோயிலில் அம்மன் சன்னதியில் சமணர் சிலை உள்ளது என்பதாகும். தகவலை உறுதி செய்த...