Posts

Showing posts from December, 2014

பௌத்த சுவட்டைத் தேடி : அரியலூர், இராயம்புரம், பரவாய், ஒகுளூர்

Image
போதிய குறிப்புகள், செய்திகளைத் திரட்டிக்கொண்டு செல்லும்போதுகூட  பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகளைப் பார்த்த அனுபவத்தினை ஒரு களப்பணியில்போது பெற்றேன். அத்துடன் வேறு இரு புத்தர் சிலைகள் இருப்பதையும் அறிந்தேன். அது என் ஆய்வில் மறக்க முடியாத அனுபவமாகும். களப்பணியின்போது தஞ்சாவூரில் தொடங்கி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த அரியலூர், இராயம்புரம், குன்னம், பரவாய் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். 15 வருடங்களுக்கு முன் நான் சென்ற இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் பெருமையடைகிறேன். 18.3.1999 (தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை நாள்) அரியலூர் அரியல ூர் புத்தர் (1999)  புகைப்படம் ஜம்புலிங்கம்  என் பயணத்திட்டத்தில் முதலில் தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்குப் பேருந்தில் சென்றேன். அங்கு கோட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புத்தர் சிலை உள்ளதாக திருச்சி அருங்காட்சியக காப்பாளர் திரு இராஜ்மோகன் மற்றும் அரியலூர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இல. தியாகராஜன் ஆகியோர் கூறியிருந்தனர். (தற்போது இருவரும் பணி நிறைவு பெற்றுவிட்டனர்)....