பௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் பரசுராமர் குளம்
8.6.2014 இன்று மதியம் முதல் எனக்கு தொடர்ந்து நண்பர்களிடமிருந்தும், அறிஞர்களிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள். "தஞ்சாவூரில் ஏதோ சமணர் சிலை கண்டுபிடித்துள்ளார்களாம், பார்த்தீர்களா? சிலர் புத்தர் என்றும் கூறிக்கொள்கிறார்கள்". தொடர்ந்து மாலை செய்தித்தாளில் 'தஞ்சையில் இன்று மீன் வலையில் சிக்கிய சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்' என்ற தலைப்பில் செய்திவெளியாகியிருந்தது. வலையில் இரு சிலைகள் சிக்கியதாகவும் அதில் ஒன்று மகாவீரர் சிலை என்றும் இன்னொரு சிலை 11 முகங்களைக் கொண்ட பிரம்மமூர்த்தி சிலை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. புகைப்படம் நன்றி தி இந்து செய்தியுடன் காணப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தபோதே ஒரு சிலை புத்தர் சிலை, மகாவீரர் சிலை அல்ல என்பதை உணரமுடிந்தது. 9.6.2014 மறுநாள் காலையில் செய்தித்தாள்களில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரெட்டிப்பாளையம் சாலையின் அருகில் உள்ள குளத்தில் (ராமநாதபுரம் ஊராட்சி, காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பரசுராமர் குளம்) மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் வலையில் இரு சிலைகள் சிக்கியதாக செய்தி வெளியாகியிருந்தது. சில ...