தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் : பிக்கு போதிபாலா, க.ஜெயபாலன், இ.அன்பன்
பௌத்தம் தொடர்பாக பதிவுகள் அருகிவரும் இக்காலக்கட்டத்தில் வெளியாகியுள்ள ஓர் அரிய நூல் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம். 24.3.2013இல் சென்னையில் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 35 தமிழ்க்கட்டுரைகளையும், 5 ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம் பின்வரும் நோக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது: "உலகம் முழுவதும் இன்றைக்குப் பௌத்தம் உள்ளது. உலகம் முழுவதும் பௌத்தம் பரவிடச் செய்தவர்கள் தமிழர்களே. தமிழக பௌத்த அறிஞர்கள்தான் பாலி மொழியில் பௌத்த மறைகளுக்குச் சிறந்த உரைகளை வகுத்துள்ளனர். இந்த உண்மைகளைத் தமிழர்களும் உணரவில்லை. தமிழரல்லாதாரும் பெருமளவில் அறியவில்லை. இதை நீக்கியாக வேண்டும். இலங்கை, பர்மா (மியான்மர்), திபெத், தாய்வான், சீன நாடுகளில் இன்றைக்கும் தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன. இவைகளை உலகம் அறியவேண்டும். இக்கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் உலகத்திற்கே பௌத்தத்தைப் போ...