Posts

Showing posts from September, 2013

In search of imprints of Buddhism: Pondicherry

Image
Dr B Jambulingam AUGUST 24, 2013 I went to French Institute of Pondicherry during February 1999 to collect some materials in connection with the Buddha statues found in the Chola country for my doctorate. In connection with the Jain project carried out by the French Institute, Dr Murugesan contacted me during December 2011 for getting some clarification which I readily responded. Mr Thilllai Govindarajan, who carried out a project under the title "Jainism in Thanjavur district" also joined us. Later we exchanged information in connection with the Buddha statues found in this area. The Institute invited me for a discussion, on 24.8.2013 in connection with a seminar on    Buddhism in Tamil Nadu with special reference to Classical Tamil . I had the chance of giving my opinions in connection with their project which I felt as a great privilege. While comparing with the other earlier works, it seems, more number of Buddha statues have been found during the last two decad...

வாசிப்பை நேசிப்போமே : தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த சமண அறங்களும்

Image
முனைவர் பா.ஜம்புலிங்கம் நான் படித்த  பௌத்தம் தொடர்பான நூல்களில் ஒன்று  முனைவர் சு.மாதவன் எழுதியுள்ள தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த சமண அறங்களும். தான் மேற்கொண்ட ஆய்வினை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கில் நூலாக்கித் தந்துள்ளது பாராட்டத் தக்கதாகும். தமிழில் காப்பிய ஆய்வுகள் பௌத்த, சமணப் பின்னணியில் வந்துள்ள அளவுக்குத் தமிழ் அற இலக்கியங்கள் குறித்து ஆய்வுகள் வரவில்லை  என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஆசிரியர் (ப.xix) , இத்தகு ஆய்வுக்காகத் தான் மேற்கொண்ட முயற்சிகளை முன்வைக்கிறார். சமூக, வரலாற்று, மெய்யியல் பின்னணி (பக்.1-45), அறவியல் (பக்.46-58), பௌத்த மற்றும் சமண அறவியல் (பக்.59-161) , தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த அறங்களும் மற்றும் சமண அறங்களும் (பக்.162-284) , பொதுவியல்புகளும் சிறப்பியல்புகளும் (பக்.285-305) என்ற தலைப்புகளில் மிகவும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் இயல்களை உரிய பகுப்புகளாகப் பிரித்து விவாதிக்கிறார். தமிழ் அற இலக்கியங்கள் என்ற நிலையில் திருக்குறள், நாலடியார், பழமொழி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி மற்...

பௌத்த சுவட்டைத் தேடி : புதுச்சேரி

Image
முனைவர் பா.ஜம்புலிங்கம் ஆகஸ்டு 24, 2013 எனது முனைவர் பட்ட ஆய்விற்காக சோழ நாட்டைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க பிப்ரவரி 1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். அந்நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டம் தொடர்பாக முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் டிசம்பர் 2011இல் என்னைத் தொடர்பு கொண்டனர்.  அத்திட்டத்திற்கு உதவ இசைந்தேன். எனது மேற்பார்வையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்ற திட்டத்தை மேற்கொண்ட திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் களப்பணியின்போது சேர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தினரோடு சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றிய செய்தியையும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிறுவனத்தார் பௌத்தம் தொடர்பான கருத்தரங்கிற்காக (24.8.2013) என்னை அழைத்திருந்தனர். இத்திட்டம் தொடர்பாக அவர்கள் தயாரித்துள்ள குறுந்தகட்டின் பதிவுகளைப் பார்க்கவும், கருத்து கூறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  1999இல் என் ஆய்வுக்காகத் தரவுகளைத் தேடிச் சென்ற நிறுவனம் என்னை இக்கருத்தரங்கிற்காக அழைத்ததைப் பெருமையாகக் கர...