பௌத்த சுவட்டைத்தேடி : உள்ளிக்கோட்டை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையில் 2004இல் நான் பார்த்த இளவரசனை மறுபடியும் அண்மையில் காணச்சென்றபோது பெற்ற அனுபவத்தை அறிய உள்ளிக்கோட்டை செல்வோம். நவம்பர் 2004 மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்னுமிடத்தில் புத்தர் சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்ல உரிய வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். அவ்வாறான பெயரில் ஒரு ஊரைப் பற்றி நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. காத்திருந்த நாள் வந்தது. தஞ்சாவூர்- மன்னார்குடி-பட்டுக்கோடை என்ற நிலையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் வடசேரி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் உள்ளிக்கோட்டை சென்றேன். வழக்கம்போல் பேருந்தைவிட்டு இறங்கியதும் புத்தரைப் பற்றி விசாரித்தேன். வயதான பெண்மணி ஒருவர் "இளவரசனைப் பார்க்கவந்தியா, சந்தோசமா இருக்குப்பா" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் எனது நடையைத் தொடர்ந்தேன். அருகில் மற்றொருவரிடம் கேட்டபோது அவர், "குதிரையில வேகமாக வந்த இராஜகுமாரனைப் பார்க்க நீங்கள் வந்ததறிந்து மகிழ்ச்சி. இப்பகுதியில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு தொண்டு செய்துகொண்டிருக்கும் தவத்திரு மாதவகுமாரசுவா...