Posts

Showing posts from October, 2012

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலை

Image
பேட்டைவாய்த்தலையில் 1998இல் முதன்முதலாக புத்தர் சிலை பார்க்கச் சென்றது, அச்சிலை 2002இல் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது, அவ்வாறு காட்சிப்படுத்தப்பட நான் அனுப்பிய அஞ்சலட்டைதான் காரணம் என 2008இல் அறிந்தது என்ற பின்னணியில் முதலில் பேட்டைவாய்த்தலைக்கும், பின்னர் திருச்சிக்கும் செல்வ ோம்.  மார்ச் 1998 திருச்சிப் பகுதியின் களப்பயணத்தின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன்.  திருச்சியில் காணப்படும் புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறினார் . அவர் கூறிய இடங்களில் ஒன்று திருச்சி-கோயம்புத்தூர் சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பேட்டைவாய்த்தலை.அங்கு செல்ல உரிய நாளை எதிர்ந ோக்கியிருந்தேன். செப்டம்பர் 1998 திட்டமிட்ட ஒரு நாளில் பேருந்தில் அங்கு சென்றேன். பிற இடங்களைப் பார்த்துவிட்டு,  அவ்வூரைச் சென்றடைய மாலை நேரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி, புத்தர் சிலை உள்ள இடத்தைப் பற்றி பல இடங்களில் விசாரித்தேன். அப்ப ோது மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்புறம் ஒரு சிலை உள்ளதாகக் கூறினர். பேருந்து நிறுத்தத்தி...