புத்தரைத் தேடி : தினமணி

------------------------------------------------------------------------------------------- 6.1.2008 நாளிட்ட தினமணி கதிர் இணைப்பில் வெளியான, என் ஆய்வு தொடர்பான முதல் பேட்டியைப் பகிர்வதில் மகிழ்கிறேன். ------------------------------------------------------------------------------------------- எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும், மரத்தடிகளிலும், தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து சிதைந்து கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்து கொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கரை இருக்கிறது; ஆதாயம் இருக்கிறது? ! தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார் ; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள் அட அப்படியா! என வாய் பிளந்துவிடு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள். முனைவர் பா.ஜம்புலிங்கமும் அப்படித்தான். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறா...