Wednesday, 1 January 2020

A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009) : புத்தர் ஒளி

2020 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2020 முதல் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்பெருமக்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

புத்தர் வழி மார்ச் -ஏப்ரல் 2018 இதழில் A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009) என்ற தலைப்பில் வெளியான என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

வெளியிட்ட மரியாதைக்குரிய பிக்கு மௌரியார் புத்தா அவர்களுக்கும், கட்டுரை வந்த செய்தியினைத் தெரிவித்து இதழைத் தந்து உதவிய ஆய்வாளர் திரு ரவிக்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தக் கட்டுரை முதலில் தமிழ்ப்பல்கலைக்கழக காலாண்டு ஆய்விதழான Tamil Civilization (Vol 23, Oct-Dec 2009, Tamil University, Thanjavur, Tamil Nadu) இதழில் வெளியானதாகும். 


"Coromandel: A Personal History of South India" (Charles Allen, Little Brown Book Group, London, 2017) என்ற நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த என் ஆய்வினைப் பற்றி அறிந்த திரு சிஷிர் நிஹாம் (Mr Shishir Nikam, Pune), தன்னுடைய தமிழ்நாட்டுப் பயணத்தின்போது 16 டிசம்பர் 2019 அன்று என்னைக் காண வந்திருந்தார். பௌத்த ஆய்வினைப் பற்றியும், களப்பணியைப் பற்றியும் ஆர்வமாகக் கேட்டறிந்தார்.


Sunday, 1 December 2019

சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) : Shanlax

21, 22 ஜுன் 2019 ஆகிய நாள்களில் தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க இதழில் வெளியான சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) என்ற தலைப்பிலான என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
கட்டுரையைக் கேட்டு வாங்கி அனுப்பிவைத்த திரு ஈ.அன்பன், வெளியிட்டு உதவிய முனைவர் க.ஜெயபாலன், இதழை அனுப்பிவைத்த முனைவர் ச. பாலச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.Friday, 1 November 2019

In search of imprints of Buddhism : Pillaipalayam, Ariyalur district, Tamil Nadu

During our field study on 25 August 2019 we found a Buddha at Pillaipalayam in Ariyalur district of Tamil Nadu.

Alongwith Dr M.Selvapandian and Mr Ravikumar the field work was carried out. We planned to meet at the Cross road near Gangaikondacholalpuram. I arrived earlier and as there was some delay in their arrival  due to non availability of the bus, I asked Mr Selvapandian if there were any interesting place nearby. He informed me about the sculptures found in Sengalmedu which was at a distance of 1.5 km from there. By walk I reached the place and saw the beautiful sculptures there. Then I returned. By now they also joined with me.

After a brief discussion at Cross road we started searching  about the place where the Buddha was said to have been found. We were informed that from there at a distance of 3 km there was a place called Pillaipalayam (from Gangaikondacholapuram, 5 km). Some told the place name was Pillapalayam. We took an auto and started our field study. On our way we saw the Pandian lake. A very serene village. Midst of the village a a beautiful Buddha statue was found alongwith two Vinayaka statues. They were being worshipped. On seeing the Buddha statue I felt shocked as it was a very damaged condition. To my knowledge, this was the first time in the field study I happened to see such as Buddha in such condition.

After introducing ourselves to the villagers, we started to study about the statue. Some of them informed that the statue was found only upto hip portion. This reminded me the Buddha I found earlier in Thanjavur district. In February 2002 I saw two Buddha statues in a village called Gopinathaperumalkoil in Tiruvalanchuzhi-Pattiswaram, of which one was in a damaged condition. On a cursory look I came to know that there would be the possibility of finding the Buddha in full form. Later with the help of the villagers we brought the statue out. The statue was of 97 cm height. We cleaned the statue and then photographed it. The statue was found with the flame atop the curling hair, half closed eyes, elongated ears and so on. It had the iconography aspects of the Buddha statues found in the Chola country, comprising of composite Trichy district, composite Thanjavur district and Pudukottai district of Tamil Nadu. Nearly half portion of the statue was found in a damaged condition. The right hand, part of left hand were found broken. The parts of flame known as usnisha, nose and lips were also found damaged. In spite of the damaged status, the statue was worshipped by the local people. We were informed that 15 years back when banks were constructed on the Pandyan lake this statue was found and they kept the statue under the peepul tree and started worshipping the Buddha. 

For my doctorate and on completion it, during the field study carried out by me for the past 25 years I found Buddhas in sitting posture in Ariyalur, Jayamkondam, Keelakulathur, Kuzhumur, Suttamalli, Muthuservaimadam, Peria Thirukkonam, Rayampuram and Vikramangalam in Ariyalur district of Tamil Nadu. This Buddha was also found on the style of these Buddhas. 

After taking other particulars about the Buddha statue, we kept it as found earlier. After requesting the villagers to place the Buddha on a small pedestal and thanking them for their wholehearted cooperation, we left.

 Buddha statue near Udayarpalayam, Dinamani, Tamil daily


Times of India, 27 August 2019
New Indian Express, 27 August 2019


11 c Buddha statue found in Ariyalur, Dinamlar, Tamil daily
Buddha statue of 11 c found near Udayarpalayam in Ariyalur district,
Hindu Tamil daily 
In FB this post had 67 shares
My thanks are to:
  • Dr M.Selvapandian and Mr G.Ravikumar
  • Pillaipalayam auto driver Mr Kollapuram Ravi
  • Mr Sakthivel, Mr Tamilselvan of Pillaipalayam and other villagers
  • The Newspapers which published the newsitem

Tuesday, 1 October 2019

பௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்

அண்மையில் மேற்கொண்ட களப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இராஜேந்திரசோழன் அகழ்வைப்பகம் சென்றபோது, முந்தைய களப்பணிகளின்போது கண்ட அங்கிருந்த புத்தர் சிலைகளைக் காணச் சென்றேன்.

அங்குள்ள காட்சிப்பேழையில் உள்ள புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா? கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா என்பதைத் தெளிவு செய்யவே இப்பதிவு. 
   
வலங்கைமான்புத்தூர் புத்தர்
அகழ்வைப்பகத்தில் மூன்று புத்தர் சிற்பங்கள் உள்ளன. அவற்றில்  காட்சிப்பேழையில் இருந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்ற குறிப்போடு இருந்தது. அதனடிப்படையில் ஆய்வேட்டில், உரிய நூல் மேற்கோளோடு கீழ்க்கண்டவாறு பதிந்தேன்:
"புத்தர் : தஞ்சை மாவட்டம் வலங்கைமான்புத்தூரிலிருந்து சேகரிக்கப்பட்டது. பத்மாசனத்தில் தியான முத்திரையில் காணப்படுகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பண்டைய நாளில் வலங்கைமான் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று இருந்ததையும், அச்சமயம் பரவி நின்றதையும் இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது. இதன் உயரம் 27 செமீ அகலம்15 செமீ (இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம், ஆசிரியர்கள் மா.சந்திரமூர்த்தி, கி.ஸ்ரீதரன், கா.நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் நடன.காசிநாதன், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை, 1993, பக்கம் 16)"

கங்கைகொண்ட சோழபுரம் புத்தர்
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) வைத்துள்ள ஆவணத்தொகுப்பில் இந்த புத்தர் படத்திற்குக் கீழே கங்கைகொண்ட சோழபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1993இல் வெளிவந்த நூலில் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்றும், புதுச்சேரி ஆய்வு நிறுவனத் தொகுப்பில் கங்கைகொண்ட சோழபுரம் என்றும், காட்சிப்பேழையில் கங்கைகொண்டசோழபுரம் என்றும் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த புத்தர் சிற்பம் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா என்பதைக் கேட்டு  அகழ்வைப்பகத்திற்கு மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்து கடிதம் எழுதினேன்.  


அகழ்வைப்பகக்காப்பாளர் இச்சிற்பம் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்று தன்னுடைய 21.9.2019 நாளிட்ட கடிதத்தில் தெரிவித்திருந்தார்.  1990களின் இறுதியில் வலங்கைமான்புத்தூர் என்ற குறிப்போடும், அண்மையில் கங்கைகொண்டசோழபுரம் என்ற குறிப்போடும் இருந்த இந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது  என்று தெரிவித்த அவருக்கு நன்றியைத் தெரிவித்தேன். 

Sunday, 1 September 2019

பௌத்த சுவட்டைத் தேடி : பிள்ளைபாளையம், அரியலூர்

25 ஆகஸ்டு 2019 அன்று மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள பிள்ளைபாளையம் என்னுமிடத்தில் புத்தர் சிலையினைக் கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.

பௌத்த, சமண மற்றும் பிற சிற்பங்களைத் தேடி களப்பணி மேற்கொள்ளும் நண்பர் முனைவர் ம.செல்வபாண்டியன் பெரம்பலூரிலிருந்தும்,  முனைவர் பட்ட ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் திருச்சியிலிருந்தும் வந்தனர். நான் தஞ்சாவூரிலிருந்து அவர்களோடு இணைவதாக முடிவெடுத்து, கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள குறுக்கு ரோட்டில் சந்தித்துப் பின்னர் களப்பணியைத் தொடங்கத் திட்டமிட்டோம். தஞ்சாவூரிலிருந்து கீழப்பழுவூர்-ஜெயங்கொண்டம்-கங்கைகொண்டசோழபுரம் குறுக்கு ரோடு என்ற வகையில் நான் வந்து சேர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டேன். பேருந்து கிடைக்காததால் அவர்கள் அங்கு வர தாமதமாக, அருகில் வேறு ஏதாவது இடம் இருக்கிறதா என்று திரு செல்வபாண்டியன் அவர்களிடம் கேட்டேன். அவர் முதலாம் இராஜேந்திரசோழன் வெற்றியின் அடையாளமாக கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவந்த சிற்பங்களை கீழச்செங்கல்மேட்டில் காணலாம் என்றார். அதன்படி அங்கிருந்து 1.5 கிமீ தொலைவில் இருந்த அவ்விடத்திற்கு நடந்து சென்று அச்சிற்பங்களைக் கண்டேன். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தேன். நான் திரும்பவும், அவர்கள் வந்து சேரவும் சரியாக இருந்தது. 

குறுக்கு ரோட்டில் தேநீர் அருந்திவிட்டு சிலை உள்ள இடத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். அங்கிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் (கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து 5 கிமீ) பிள்ளைபாளையம் இருப்பதாகக் கூறினர். சிலர் அவ்விடத்தை பிள்ளாபாளையம் என்றும் பள்ளிபாளையம் என்றும் கூறினர். அங்கிருந்து ஆட்டோவில் சென்றோம். பாண்டியன் ஏரியைப் பார்த்துக்கொண்டே சென்றோம். அழகான அமைதியான கிராமம். கிராமத்து நடுவில் பெரிய அரச மரத்தின்கீழ் புத்தர் சிலை. அருகே இரு விநாயகர் சிலைகள். புத்தரைப் பார்த்ததும் சற்றே அதிர்ச்சியானேன். தமிழகத்தில் இதுவரை நான் பார்த்த சிலைகளில் மிகவும் சிதைந்த நிலையில் அச்சிலை இருந்தது. 

கிராம மக்களிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு களத்தில் இறங்கினோம். அங்கிருந்தோர் அச்சிலையின் இடுப்புப்பகுதிக்குக் கீழே எதுவும் இல்லை என்று கூறினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி பட்டீஸ்வரம் சாலையில் உள்ள கோபிநாதப்பெருமாள் கோயில் என்னுமிடத்தில் பிப்ரவரி 2002இல் காணப்பட்ட இரு சிலைகளில் ஒரு சிலையை தலையின்றி, இடுப்புப்பகுதிக்கீழ் எதுவுமின்றி முன்னர் பார்த்துள்ளேன். பிற இடங்களில் சற்று சிதைந்த நிலையில் நான் புத்தர் சிலைகளைப் பார்த்த எனக்கு, இடுப்புக்குக் கீழும் இருக்கும் என்ற எண்ணம். சிலையை ஒட்டி கையை வைத்து தரையின் அடியில் சிறிது தூரம் வைத்துப்பார்த்தேன். சிறிது தூரத்திற்குப் பின் மண்ணையே தொடமுடிந்தது. என் ஐயத்தைத் தெளிவிப்பதற்காக சிலையை வெளியே எடுத்துப் பார்க்கமுடியுமோ என்று கேட்டபோது கிராம மக்கள் முன்வந்து உதவினர். சிலையை வெளியே எடுத்துப் பார்த்தபோது 97 செமீ உயரமுள்ள சிலையினைக் காணமுடிந்தது. தண்ணீர் எடுத்து வரச்சொல்லி அந்த சிலையைச் சுத்தம் செய்தோம். முன்னைவிட இப்போது சிலை தெளிவாகத் தெரிந்தது. சுருள் முடியுடன் கூடிய தலையின் மேல் தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், மார்பில் ஆடை, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்புடன் இருந்த அச்சிலையில் இடுப்புப்பகுதி வரை மட்டுமே இருந்தது. சிலை பாதிக்குமேல் சிதைந்த நிலையில் இருந்தது. வலது கை முற்றிலும், இடது கை பாதிக்கு மேலும் உடைந்த நிலையிலும், தீச்சுடர், மூக்கு, உதடுகள் சிதைந்த நிலையிலும் இருந்தன. சிதைந்த நிலையிலும் இச்சிலையினை உள்ளூர் மக்கள் வழிபட்டு வருவதாகக் கூறினர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் ஏரிக்குக் கரை கட்டும்போது அச்சிலையைக் கண்டதாகவும், பின்னர் அரச மரத்தடியில் வைத்து வழிபட ஆரம்பித்ததாகவும் கூறினர். 

முனைவர் பட்ட ஆய்விற்காகவும், தொடர்ந்தும் கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டுவருகின்ற களப்பணியின்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, முத்துசேர் வைமடம், பெரிய திருக்கோணம், ராயம்புரம், விக்ரமங்கலம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகளைக் கண்டுள்ளேன். இதன் அமைப்பில் இதுவும் அமர்ந்த நிலையிலான சிலை என்பதை அறியமுடிந்தது. 

இதற்கு முன்னர் அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் புத்தர் சிலையை முனைவர் ம.செல்வபாண்டியன் அவர்களோடு ஜுன் 2006இல் மேற்கொண்ட களப்பணியின்போது கண்ட அனுபவத்தை பௌத்த சுவட்டைத் தேடி : குழுமூர் என்ற பதிவில் காணலாம்.   

வழக்கம்போல சிலையினைப் பற்றிய குறிப்புகளைத் தொகுக்க ஆரம்பித்து, மறுபடியும் சிலையை பழைய நிலையில் அமைத்தோம். சிறிய மேடை ஒன்றினைக் கட்டி அதனை பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டோம். புத்தரையும், ஊர் மக்களையும் பிரிய மனமின்றி விடைபெற்றோம்.
  • உடன் வந்த முனைவர் ம.செல்வபாண்டியன், திரு க.ரவிக்குமார்
  • பிள்ளைபாளையத்தில் களப்பணியில் உதவிய திரு சக்திவேல், திரு தமிழ்ச்செல்வன், ஆட்டோ ஓட்டுநர் திரு கொல்லாபுரம் ரவி மற்றும் கிராம மக்கள்
  • செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்
16 செப்டம்பர் 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

Thursday, 1 August 2019

பௌத்த சுவட்டைத் தேடி : திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது திருப்பராய்த்துறையில் முதன்முதலாகக் காணப்படுகின்ற புத்தர் சிலையாகும். 
திருப்பராய்த்துறை புத்தர் 
புகைப்படம் நன்றி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி 
தகவல் உதவி : திரு க.ரவிக்குமார்

ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் உடன் பா.ஜம்புலிங்கம்

புத்தர், திருப்பராய்த்துறை, கி.பி.10ஆம் நூற்றாண்டு,  என்ற குறிப்புடன் அந்த சிலை உள்ளது. திருப்பராய்த்துறை புத்தர் சிலைக்குப் பின்புறம் பிரபை உள்ளது. மார்பில் ஆடையும், தலையில் தீச்சுடரும் உள்ளன.  முகம் தெளிவாகத் தெரியவில்லை.  வழக்கமாக புத்தர் சிலைக்குள்ள பிற கூறுகள் இதில் உள்ளன.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு  (Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் (8344856826) திருச்சி அருகேயுள்ள திருப்பராய்த்துறையைச் சேர்ந்த புத்தர் சிலையைப் பற்றிய பதிவு பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளதாகக்கூறி, புகைப்படத்தைத் தந்தார். 

களப்பணியின்போது ஆங்காங்கே காணப்படுகின்ற சில விடுபாடுகள் ஆய்வின் முக்கியமான பல தரவுகளைச் சேகரிப்பதில் குறைகளைத் தரும் என்பதை உணர்த்தியது திருப்பராய்த்துறை புத்தர் சிலை. ஆய்வின்போது களப்பணி மேற்கொண்டபோது பெரும்பாலும் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளைச் சார்ந்த அருங்காட்சியங்களுக்கு மட்டுமே சென்றதால், மதுரையிலுள்ள இந்த புத்தர் சிலையைப் பற்றி அப்போது அறியமுடியவில்லை. 
திருப்பராய்த்துறை புத்தர் 
நன்றி: திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம், மதுரை 
புகைப்படம் : திரு ஜ. சிவகுரு
இந்த புத்தர் சிலை மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புத்தர் சிலை, சோழ நாட்டில் பௌத்தம் பரவியிருந்ததை உணர்த்தும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காணப்படுகிறது. 


Just I came to know about a Buddha statue found in Tirupparaithurai in Trichy district of Tamil Nadu. I got a photograph of this Buddha from the collections of French Institute of Pondicherry, through Mr G.Ravikumar, a Ph.D., scholar, Periyar E.V.R.College (Autonomous), Trichy, who is doing under the title "Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district". The Buddha is now exhibited in the museum in the campus of Thirumalai Nayakkar Palace Madurai. As I did not cover the museums of other districts I could not able to find the statue earlier. This Buddha is an addition to the Buddhas of Trichy district. 

Monday, 1 July 2019

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்

திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலையில் வயலில், அடையாளம் தெரியாத வகையில் முகம் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது பேட்டவாய்த்தலையில் இருந்த இரண்டாவது புத்தர் சிலையாகும்.

புத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்டபோது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்கள் கூறிய தகவல்களில் ஒன்று பேட்டவாய்த்தலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது என்பதாகும். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பேட்டவாய்த்தலையில் சென்று பல இடங்களில் தேடி பின்னர் சிலை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. மார்பில் உள்ள ஆடையின் மூலமாக அது புத்தர் என்பதை உறுதி செய்யமுடிந்தது.
மத்யார்ஜுனேஸ்வர் கோயிலின்
முன்பாக இருந்த புத்தர். புகைப்படம் : பா.ஜம்புலிங்கம் 
திருச்சி-கரூர் சாலையில் பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக அச்சிலை இருந்தது. அப்பகுதியில் முன்பு மூன்று சிலைகள் இருந்ததாகவும், இரண்டு சிலைகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும் சிலர் கூறினர். (சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, ப.152) சிலையைப் பார்த்துவிட்டு, திருச்சி அருங்காட்சியகக் காப்பாட்சியருக்கு இவ்வாறாக ஒரு சிலை இருக்கும் விவரம் அஞ்சலட்டை வழியாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.  காப்பாட்சியரின் சீரிய முயற்சியால் அந்தச் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் சந்தித்தபோது அவர், பேட்டவாய்த்தலை புத்தர் திருச்சி வருவதற்குக் காரணம் நான் அஞ்சலட்டையில் தெரிவித்த தகவலே என்று கூறினார்.

அரசு அருங்காட்சியகத்தில் பேட்டவாய்த்தலை புத்தர் 
புகைப்படம் : திரு க.ரவிக்குமார்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு  (Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் (8344856826) பேட்டவாய்த்தலையைச் சேர்ந்த மற்றொரு புத்தர் சிலையைப் பற்றிய பதிவு பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளதாகக்கூறி, புகைப்படத்தைத் தந்தார். 
பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர் 
புகைப்படம் நன்றி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி
தகவல் உதவி : திரு க.ரவிக்குமார்
வயல் பகுதியில் இடுப்பு வரை புதைந்துள்ள நிலையில் புத்தரை அப்புகைப்படத்தில் காணமுடிந்தது. முகம் முற்றிலும் தெரியாத வகையில் வெள்ளையடித்து வைத்துள்ளனர். தலைக்குப் பின் பிரபை காணப்படுகிறது. மார்பில் ஆடை உள்ளது. தலையில் உள்ள தீச்சுடரை வைத்து இது புத்தர் என்று உறுதியாகக் கூறமுடியும். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் பேட்டவாய்த்தலையில் மேலும் ஒரு புத்தர் சிலை இருந்தது உறுதி செய்யப்படுகிறது. இச்சிலை தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற தொடர்ந்து களப்பணி மேற்கொள்வோம்.   
ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் உடன் பா.ஜம்புலிங்கம்
During my earlier field trip in 1999, on the information by historian Dr R.Kalaikkovan, I saw a Buddha statue in Pettaivaitthalai in Trichy district of Tamil Nadu, which was later shifted to the Government Museum in Trichy. Now, after two decades, I got a photograph of another Buddha statue from Pettaivaitthalai from the collections of French Institute of Pondicherry, through Mr G.Ravikumar, a Ph.D., scholar, Periyar E.V.R.College (Autonomous), Trichy, who is doing under the title "Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district". Expecting the day to go on another field study to see the field where the Buddha statue was said to be found.