Posts

Showing posts from September, 2025

உலக மரபு வாரம் 2023 : தமிழக நடுகல் மரபு

Image
தஞ்சாவூர், சங்கீத மகாலில் உலக மரபு வாரத்தை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய நடுகல் மரபு தொடர்பான வரலாற்றுக் கண்காட்சி 19.11.2023 முதல் 24.11.2023 வரை நடைபெற்றது.  நடுகல் மர பினை ஒரு பறவைப்பார்வையில் நம் முன் கொண்டுவந்து நிறுத்திய அமைப்பாளர்களின் முயற்சி போற்றத்தக்கதாகும்.  இக்கண்காட்சிக்குச் சென்றது ஒரு நினைவில் நிற்கும் அனுபவம். நடுகற்களைப் பற்றி உரிய குறிப்புகளுடன் காட்சிப்படுத்திப்பட்டிருந்த விதமும், பார்வையாளர்களுக்கு யாக்கை குழுவினர் விளக்கிய விதமும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது.  இந்நிகழ்வின் ஒரு பகுதியாக "மரபுச்சின்னங்களைக் கண்டறிதல், ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வுக்கான எதிர்காலத் திட்டமிடல்", என்ற தலைப்பில் 24.11.2023இல் நடைபெற்ற கலந்துரையாடல் குழுவில் பங்கேற்று, கருத்துகளைத் தெரிவிக்கும் நல்வாய்ப்பினைப் பெற்றேன்.  அப்போது ஆய்வின்போது நான் கண்ட புத்தர் சிலைகளைப் பற்றியும் என்னுடைய  சோழ நாட...

சம்பந்தரும் பௌத்தமும் : திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை

Image
  ------------------------------------------------------------------------------------------- நன்றி:  திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை பதிப்பாசிரியர்  : த.கோ.பரமசிவம் மற்றும் பலர்   -------------------------------------------------------------------------------------------

பௌத்த சுவட்டைத் தேடி : காஞ்சிபுரம்

Image
1993இல் ஆய்வுக்களத்தில் இறங்கியபோது தஞ்சாவூர் மாவட்டத்திலும், சோழ நாட்டிலும் உள்ள பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளை வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்டோரின் நூல்களிலும் கண்டேன்.  கள எல்லைக்கு அப்பாற்பட்டு பிற இடங்களைக் காண விருப்பம் இருந்தபோதிலும் பொருளாதார சூழல், நேரமின்மை காரணமாகச் செல்லும் வாய்ப்பு எழவில்லை.  என்னுடைய ஆய்வுக்கு முதலில் நான் எடுத்துக்கொண்டது மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலாகும். அதில் அவர் கூறியிருந்த இடங்களில் என்னை அதிகம் ஈர்த்தது காஞ்சிபுரம் பகுதியாகும். காஞ்சிபுரத்தில் உள்ள, அவரும் அவருக்குப் பின் வந்த அறிஞர்களும் குறிப்பிட்டுள்ள, புத்தர் சிலைகளைக் காண ஆவல் தொடர்ந்துகொண்டே இருந்தது.  ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanajvur district,  Madurai Kamaraj University, Madurai, 1995), முனைவர்ப் பட்ட (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) ஆய்வேடுகளையும், (என் ஆய்வு நூலின் தமிழ்ப்பதிப்பையும் (முனைவர் பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம் , புது எழுத்து, காவிரிப்பட்டிணம், 2...

மணிமேகலையின் பௌத்தப் பேரறம் : அரங்கமல்லிகா

Image
வாழ்த்துரை பேரா. அரங்கமல்லிகா படைத்துள்ள மணிமேகலையின் பௌத்தப் பேரறம் என்ற இந்நூல் பல்லுயிர் ஓம்பும் பௌத்தம், மணிமேகலையின் அறிவாளுமை, மணிமேகலையின் பௌத்தப் பேரறம், நவீனத்துவமும் பௌத்தப்பேரறமும், அமுதசுரபி–அன்பு-கருணை, பௌத்தமும் பாதவழிபாடும், புத்தக்காஞ்சியும் போதி அறமும், சீலமும் தானமும், ஆன்மாவும் மறுபிறப்பும், பௌத்தம் காட்டும் ஈஸ்வரம், பௌத்தத்தில் பெண் தொன்மம், இறைகாக்கும் இந்திரவிழா என்னும் 12 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மணிமேகலை என்றாலும் பௌத்தம் என்றாலும் அறம் என்ற சொல் இயல்பாக நினைவிற்கு வந்துவிடும். அவ்வாறான பிணைப்பைக் கொண்ட பேரறத்தைப் பற்றி இலக்கியம், வெளிநாட்டவர் குறிப்புகள், அறிஞர்களின் நூல்கள் போன்ற சான்றுகளைக் கொண்டு உரிய மேற்கோள்களுடன் பன்னோக்கில் விவாதித்துள்ள ஆசிரியர் மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்பையும், பௌத்தத்தின் சிறப்பையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம். “அறத்தையே மனித மனமானது நாடி அடையவேண்டும். அதற்கு அடங்கா மனமானது அடங்கும் வகையில் மனிதர்களாகிய நாம் அன்பு, இரக்கம், கருணை ஆகிய நல்ல பண்பாட்டுத் தளத்தில் செலுத்தி இயங்குவோமேயானால், ம...

நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள் : வரலாற்றுச் சுடர்கள்

Image
  நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள் ------------------------------------------------------------------------------------------- நன்றி:  வரலாற்றுச் சுடர்கள் பதிப்பாசிரியர்  : கவிமாமணி கல்லாடன் -------------------------------------------------------------------------------------------

தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம் : எத்தனம் தமிழியல் ஆய்வுகள்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: எத்தனம்,  பதிப்பாசிரியர்  :  முனைவர் ஆ. சண்முகம் ------------------------------------------------------------------------------------------- (15  ஜூ ன் 1998இல் திருச்சி, வானொலி நிலையத்தில்  பேசிய  உரையின் அச்சுவடிவம்) -------------------------------------------------------------------------------------------