Posts

Showing posts from July, 2021

நாளிதழ் செய்தி : உள்ளிக்கோட்டை புத்தர் : ஜனவரி 2005

Image
1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது மங்கலம் , அய்யம்பேட்டை , புதூர் , கோபிநாதப்பெருமாள் கோயில் , குடவாசல் , சுந்தரபாண்டியன்பட்டனம் , திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், திருச்சி, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், பிள்ளைபாளையம்  ஆகிய இடங்களில்  புத்தர் சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய பதிவுகளில் திருநாட்டியத்தான்குடி வரையிலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றிய நாளிதழ் செய்திகளைக் கண்டோம். இப்பதிவில் உள்ளிக்கோட்டையில் திரு மாதவகுமாரசுவாமி அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகளைக் காண்போம்.   செப்டம்பர் 2012இல் மேற்கொண்ட கள ஆய்வின்போது இச்சிலையை அங்குக் காணவில்லை.   நன்றி :  சிலை இருப்பதைத் தெரிவித்து உதவிய மாதவகுமாரசுவாமி செய்தியை வெளியிட்ட நாளிதழ்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய இந்த இவ் வலைப்பூவில் கட்டுரைகள், பேட்