Posts

Showing posts from June, 2021

சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள்

Image
அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்று வருகின்ற தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாத இணைய வழிக்கருத்தரங்கில்  சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள் என்ற தலைப்பில் 17 மே 2021 மதியம் 3.00 மணியளவில் உரையாற்றினேன். பூம்புகார் பௌத்த விகாரத்தின் முன்பாக (புகைப்படம் : மூத்த மகன் ஜ.பாரத்)  சோழ நாட்டில் பௌத்த விகாரங்கள் இருந்த பூம்புகார், நாகப்பட்டினம், கோயில் இருந்த திருவிளந்துறை, கோயில்கள் உள்ள பெருஞ்சேரி, புத்தமங்கலம், தனியாக புத்தருக்காக ஒரு சன்னதி அமையவுள்ள மங்கலம், புத்தர் சிற்பங்கள் உள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள், சோழ நாட்டில் களப்பணியில் நேரில் கண்ட 60க்கும் மேற்பட்ட புத்தர் கற்சிலைகள், புத்தர் என்றழைக்கப்படுகின்ற சமண தீர்த்தங்கரர் சிலைகள் மற்றும் பிற சிலைகள் குறித்து உரையாற்றப்பட்டது. பங்கேற்பாளர்களின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. உரையைக் காணவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன்.   யுட்யூபில் சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள் என்ற ப...