நாளிதழ் செய்தி : திருநாட்டியத்தான்குடி புத்தர் : மார்ச் 2003

1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது கீழ்க்கண்ட புத்தர்சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. 1.மங்கலம் (1999) 2.அய்யம்பேட்டை (நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி) (1999) 3.புதூர் (2000) 4.கோபிநாதப்பெருமாள் கோயில் (2002) தலையின்றி 5.கோபிநாதப்பெருமாள் கோயில் (2002) தலையின்றி 6.குடவாசல் (2002) 7.சுந்தரபாண்டியன்பட்டினம் (2002) 8.திருநாட்டியத்தான்குடி (2003) 9.உள்ளிக்கோட்டை (2005) 10.குழுமூர் (2006) 11.ராஜேந்திரப்பட்டினம் (2007) 12.வளையமாபுரம் (2007) 13.திருச்சி (2008) 14. கண்டிரமாணிக்கம் (2012) 15.கிராந்தி (2013) 16.மணலூர் (2015) 17.பிள்ளைபாளையம் (2019) சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தர் வரையிலான நாளிதழ் செய்திகளை இதுவரைபார்த்துள்ளோம். இப்பதிவில் திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலையைப் பற்றிக் காண்போம். 23 ஏப்ரல் 1995 இல் கும்பகோணம் என் . சேதுராமன் அவர்களுடன் ஆய்வு பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தஞ்சாவூரில் பௌத்தம் தொடர்பாக அவர் கூறுகின்ற செய்திகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாகப் பட்டினத்தில் புத்தர் விகாரை , நாகப்ப