Posts

Showing posts from April, 2020

சோழ நாட்டில் பௌத்தம் : 50,000 பக்கப் பார்வைகள்

Image
           கடந்த 10 ஆண்டுகளாக எழுதி வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவின் மூன்று முதன்மைப்பக்கங்கள் ஒவ்வொன்றையும் சுமார் 50,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். ஆய்வு தொடர்பான இந்த வலைப்பூவிற்கு ஆதரவு தருகின்ற நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. முதலில் சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பாக மட்டுமே எழுத ஆரம்பித்தேன். பின்னர் நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி பௌத்தம் தொடர்பான பொதுவான பதிவுகளையும், ஆங்கிலக்கட்டுரைகளையும், பௌத்தம் தொடர்பான நூல்களைப் பற்றியும்   எழுதி வருகிறேன்.   முக்கியமான பதிவுகளை தமிழ் மொழி அறியாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதிவருகிறேன். அந்த வகையில் பிற ஆங்கில நூல்களிலும், இதழ்களிலும் என்னுடைய இந்த வலைப்பூவிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இவ்வலைப்பூவின் கீழ்க்கண்ட பதிவுகள் 50,000க்கும் மேலான பக்கப்பார்வையைக் கொண்டுள்ளன. மேற்கோள் பதிவுகள் மூன்றாண்டுகளுக்குள் 54,000க்கும் மேற்பட்ட பக்க...