பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலையில் மற்றொரு புத்தர்
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் வயலில், அடையாளம் தெரியாத வகையில் முகம் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில்,
ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது பேட்டவாய்த்தலையில் இருந்த இரண்டாவது புத்தர் சிலையாகும்.
புத்தர் சிலைகளைத்
தேடி களப்பணி மேற்கொண்டபோது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்கள் கூறிய தகவல்களில் ஒன்று பேட்டைவாய்த்தலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது என்பதாகும். அவர் கூறிய தகவலின்
அடிப்படையில் பேட்டைவாய்த்தலையில் சென்று பல இடங்களில் தேடி பின்னர் சிலை இருக்குமிடம்
கண்டுபிடிக்கப்பட்டது. மார்பில் உள்ள ஆடையின் மூலமாக அது புத்தர் என்பதை உறுதி செய்யமுடிந்தது.
மத்யார்ஜுனேஸ்வர் கோயிலின் முன்பாக இருந்த புத்தர். புகைப்படம் : பா.ஜம்புலிங்கம் |
திருச்சி-கரூர் சாலையில்
பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக அச்சிலை இருந்தது. அப்பகுதியில்
முன்பு மூன்று சிலைகள் இருந்ததாகவும், இரண்டு சிலைகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும்
சிலர் கூறினர். (சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, ப.152) சிலையைப் பார்த்துவிட்டு,
திருச்சி அருங்காட்சியகக் காப்பாட்சியருக்கு இவ்வாறாக ஒரு சிலை இருக்கும் விவரம் அஞ்சலட்டை வழியாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. காப்பாட்சியரின் சீரிய முயற்சியால்
அந்தச் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டது. பல
வருடங்களுக்குப் பின் சந்தித்தபோது அவர், பேட்டவாய்த்தலை புத்தர் திருச்சி வருவதற்குக்
காரணம் நான் அஞ்சலட்டையில் தெரிவித்த தகவலே என்று கூறினார்.
அரசு அருங்காட்சியகத்தில் பேட்டைவாய்த்தலை புத்தர் புகைப்படம் : திரு க.ரவிக்குமார் |
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு (Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் (8344856826) பேட்டவாய்த்தலையைச் சேர்ந்த மற்றொரு
புத்தர் சிலையைப் பற்றிய பதிவு பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளதாகக்கூறி,
புகைப்படத்தைத் தந்தார்.
பேட்டைவாய்த்தலையில் மற்றொரு புத்தர் புகைப்படம் நன்றி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி தகவல் உதவி : திரு க.ரவிக்குமார் |
வயல் பகுதியில் இடுப்பு வரை புதைந்துள்ள
நிலையில் புத்தரை அப்புகைப்படத்தில் காணமுடிந்தது. முகம் முற்றிலும் தெரியாத வகையில்
வெள்ளையடித்து வைத்துள்ளனர். தலைக்குப் பின் பிரபை காணப்படுகிறது. மார்பில் ஆடை உள்ளது.
தலையில் உள்ள தீச்சுடரை வைத்து இது புத்தர் என்று உறுதியாகக் கூறமுடியும். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் பேட்டவாய்த்தலையில்
மேலும் ஒரு புத்தர் சிலை இருந்தது உறுதி செய்யப்படுகிறது. இச்சிலை தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற தொடர்ந்து களப்பணி மேற்கொள்வோம்.
ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் உடன் பா.ஜம்புலிங்கம் |
During my earlier field trip in 1999, on the information by historian Dr R.Kalaikkovan, I saw a Buddha statue in Pettaivaitthalai in Trichy district of Tamil Nadu, which was later shifted to the Government Museum in Trichy. Now, after two decades, I got a photograph of another Buddha statue from Pettaivaitthalai from the collections of French Institute of Pondicherry, through Mr G.Ravikumar, a Ph.D., scholar, Periyar E.V.R.College (Autonomous), Trichy, who is doing under the title "Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district". Expecting the day to go on another field study to see the field where the Buddha statue was said to be found.
7 நவம்பர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.
தங்களின் தேடல் போற்றுதலுக்கு உரியது ஐயா
ReplyDeleteதொடரட்டும் தங்களது தொண்டு...
ReplyDeleteஅருமை அய்யா...
ReplyDeleteதங்கள் பணி சிறப்பானது...
தொடரட்டும் தங்கள் தேடல்.
Consistent efforts on History sir
ReplyDeleteதேடல்கள் தொடரட்டும். சுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteதங்களின் களப் பணி மிகவும் போற்றுதலுக்குரியது
ReplyDeleteதங்கள் சீரிய பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி அய்யா
ReplyDeleteஅருமை.
ReplyDeleteMr Kuppu Veeramani (thro: kuppu.veeramani@gmail.com)
ReplyDeleteநன்றி.அரும்பணி ஆற்றுகிறீர்கள்.பவுத்தம் வேர்விட்ட மண்ணில் சுவடுகளைத்துழாவும் அளவு தொலைத்திருக்கிறோம். மீட்டெடுப்பதையும்,பிறவற்றையும் அவ்வப்போது அறிகிறேன்.பெருமையாகவும் உணருவேன்.சந்திப்போம்.
தேடல் பணிகள் தொடரட்டும்..வாழ்த்துக்கள்
ReplyDeleteI was recommended this website by my cousin. I'm not sure
ReplyDeletewhether this post is written by him as nobody else know such detailed about my difficulty.
You are wonderful! Thanks!
உங்களின் தொடர்ந்த தேடல் வணக்கத்துக்குரியது ஐயா..நாம் வாழும் சாதாரண இடங்களிலேயே எவ்வளவு வரலாற்று உண்மைகள் மறைந்திருக்கின்றன!! பகிர்விற்கு நன்றி ஐயா
ReplyDelete