துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்! : காமதேனு
என்னுடைய பௌத்த ஆய்வு தொடர்பாக 10 பிப்ரவரி 2019 நாளிட்ட (3.2.2019 அன்று வெளியான) காமதேனு இதழில் வெளியான கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கும் திரு ஆசைத்தம்பிக்கும் நன்றியுடன். நீரோடிய காலம் ஆசை துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்! இந்து மதம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் தாயகம் இந்தியா. இவற்றில் இ ந்தியாவுக்கு வெளியிலும் ஆதிக்கம் செலுத்திய மதம் பௌத்தம். அன்றைய காலத்தில் ஒரு குட்டி காஸ்மோபாலிட்டனாக இ ருந்த தஞ்சையிலும் பௌத்தத்தின் தாக்கம் இ ருந்து, காலப்போக்கில் அருகிப்போய்விட்டது. இ ந்தச் சூழலில் தஞ்சை மண்ணில் பௌத்தத்தின் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆய்வாளராகிய முனைவர் பா.ஜம்புலிங்கத்தைச் சந்திக்கச் சென்றோம். தஞ்சை சரஸ்வதி மகாலில் தனது நண்பரைப் பார்க்க வந்திருந்த ஜம்புலிங்கத்துடன் நிகழ்ந்த சந்திப்பு இ து. நெற்றியில் திருநீறு துலங்க நம்மை வரவேற்றார் ஜம்புலிங்கம். "தீவிர சைவ சமய பக்தரான நீங்கள் பௌத்தம் தொடர்பான ஆராய்ச்சியில் இ றங்கியது எப்படி என்ற கேள்வியிலிருந்து...