பொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018
சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை வழங்கிய வேர்கள் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்வு 25 நவம்பர் 2018 காலை மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியில் இராமலிங்க விலாஸில் நடைபெற்றது. சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் திருமதி சரோஜினி முன்னிலை வகித்தார். சிறப்புரையாக பொன்னி நாட்டில் பௌத்தம் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். காவிரியால் சோழ நாடு பொன்னி என்றழைக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, களப்பணியின் மீதான ஆர்வம், அதன்மூலமாகவே புதிதாகச் செய்திகளை வரலாற்றுலகிற்கு அளிக்க முடியும் என்ற எண்ணம் உதித்தமை தொடங்கி பௌத்தம் தொடர்பாக அரிய தேடல்களே இருந்த நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய களத்தில் காணப்பட்ட சுமார் 70 புத்தர் சிலைகள், புத்தர் வழிபாடு, வழிபாடு தொடர்பான நம்பிக்கை, பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் உள்ளிட்டவற்றைப் பேசினேன். மயிலாதுறைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்த நிலையில் மாணவர்களுக்கும் வரலாற்றின் மீதான ஆர்வம் தேவை என்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தேன். (பேச்சி...