சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர்
பத்திரிக்கை.காம் இதழில் 28 செப்டம்பர் 2017இல் வெளியான கட்டுரையின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவம். என் கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்கு என் மனமார்ந்த நன்றி. புத்தர் சிலைகளைத் தேடி களப்பயணம் செல்லும்போது பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமண சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் புதுக்கோட்டையில் உள்ள சில சமணப்படுகைகளையும், சித்தன்னவாசலில் உள்ள சிலைகளையும் கண்டேன். அந்த ஒரு தாக்கம் சரவணகோலாவிற்குச் செல்லும் ஆர்வத்தை உண்டாக்கியது. எங்கள் மூத்த மகன் பாரத், பெங்களூரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சரவணபெலகோலா சென்றேன். முழுக்க முழுக்க சிலையின் அமைப்பையும் நுணுக்கத்தையும் காணும் ஆர்வமே அதற்குக் காரணம். மறுபடியும் ஆகஸ்டு 2017இல் என் மனைவி திருமதி பாக்கியவதி, இளைய மகன் சிவகுரு ஆகியோருடன் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் ( பெங்களூரிலிருந்து 100 மைல், மைசூரிலிருந்து 60 மைல், ஹாசன் ரயில் நிலையத்திலிருந்து 32 மைல் தூரத்தில்) "விந்தியகிரி", "...