Posts

Showing posts from July, 2017

நாளிதழ் செய்தி : குடவாசல் புத்தர் : ஏப்ரல் 2002

Image
கடந்த பதிவுகளில் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றி வெளியான நாளிதழ்களில்  வெளியான செய்திகளைப் பார்த்தோம். அவ்வகையில் இதுவரை  மங்கலம் (சூன் 1999),   அய்யம்பேட்டை (நாகப்பட்டின செப்புத்திருமேனி) (நவம்பர் 1999),   புதூர் (அக்டோபர் 2000),     கோபிநாதப்பெருமாள்கோயில் (பிப்ரவரி 2002) , ஆகிய சிலைகளைப் பற்றி விவாதித்துள்ளோம். இப்போது,  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சீதக்கமங்கலத்தில் இருந்த புத்தர் சிலையைப் பற்றி வெளியான செய்திகளைக் காண்போம். இந்த புத்தர் தலையைப் பற்றிய கண்டுபிடிப்பு சற்றே வித்தியாசமானது. தமிழ்ப்பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு கோவிந்தராஜன் என்னிடம் கேட்டு, இது புத்தரின் தலை என்று என்னால் அவரிடம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. அந்த அனுபவத்தைப் பிறிதொரு பதிவில் காண்போம்.  திருவாரூர் மாவட்டத்தில் புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிப்பு, தினமணி, 18.4.2002 குடவாசல் அருகே புத்தர் சிலையின் தலை கண்டெடுப்பு, தினமலர், 18.4.2002 குடவாசல் அருகே புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்