பௌத்த சுவட்டைத் தேடி : சுத்தமல்லி
21 மற்றும் 23 ஆகஸ்டு 1999 பௌத்த ஆய்வு தொடர்பாக களப்பணி மேற்கொண்டபோது தமிழகத்திலுள்ள பல அருங்காட்சியகங்களுக்குச் சென்று சோழ நாட்டு புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கச் சென்றேன். களத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவத்திலிருந்து வித்தியாசமானது அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவம். அவ்வகையில் சுத்தமல்லி சிலையைக் கண்டேன். இந்த சுத்தமல்லி எந்த மாவட்டத்தில் தற்பொழுது உள்ளது என்ற ஆர்வத்தை உண்டாக்கியது இந்தப் பயணம். மற்ற புத்தர் சிலைகளிலிருந்து சற்று வித்தியாசமான நிலையில் இந்த புத்தர். வாருங்கள் பார்ப்போம். சுத்தமல்லி புத்தர், அரசு அருங்காட்சியகம், சென்னை (புகைப்படம் : பா.ஜம்புலிங்கம், 1999) சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் சென்றபோது சோழ நாடு தொடர்பான மூன்று புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. அவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழி (நின்ற நிலை புத்தர்), எரையூர் (அமர்ந்த நிலை) மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி (அமர்ந்த நிலை) என்ற குறிப்புடன் இருந்தன. முதன்முதலாக நின்ற நிலையிலான புத்தரி...