பௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர், காஞ்சீபுரம் மாவட்டம்
இளம்போதி என்னும் வலைப்பூவில் எழுதி வரும் திரு ஏழு. கலைக்கோவன், ஒரு புகைப்படத்தை அனுப்பி அது புத்தரா, சமண தீர்த்தங்கரரா என்று கேட்டுள்ளார். புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றியும், காஞ்சீபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அவர் எழுதி வருகிறார். அச்சிலையைப் பார்க்க சோழ நாட்டிலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்குப் போவோம் வாருங்கள். காஞ்சீபுரம் வட்டம் வாலாஜாபாத் வட்டம், நெய்க்காடுபாக்கம் வயலக்காவூர் என்னுமிடத்தில் உள்ள அ ச்சிலை புத்தரா தீர்த்தங்கரரா என்ற ஐயத்தை பின்வரும் அடையாளங்கள் உண்டாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார். 1) தோள் பட்டைக்கு மேல் உள்ள உருவம் 2) சீவர ஆடை 3) கையில் பூ போன்று உள்ளது. ஆனால் தாமரையா என்று சொல்ல முடியவில்லை. தெளிவாக இல்லை. தமிழகத்தில் சோழ நாட்டை (ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை) எனது களமாகக் கொண்டு புத்தர் சிலைகளையும், சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பார்த்த நிலையில் ஓரிரு சிலைகளை மட்டுமே பிற பகுதிகளில் பார்த்துள்ளேன். பல இடங்களில் இருந்தும் இதுபோன்ற கடிதங்கள் வரும் நிலையில் அதிகமான பணியின் ...