மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம்

மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள குடமூக்கு என்னும் பெயர் பெற்று விளங்கும் கும்பகோணம் நகரில் இரு சான்றுகள் பௌத்தம் தொடர்பாக இருந்ததாக அறிஞர்கள் விவாதிக்கின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பௌத்த ஆய்வு தொடர்பாக 1993 முதல் புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றபோது பல இடங்களில் புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. புதிய புத்தர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கும்பகோணம் நகரில் புத்தர் சிலைகளைக் காணமுடியவில்லை. பகவ விநாயகர் கோயிலில் ஒரு சிற்பமும், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டும் பௌத்தம் தொடர்பானவையாகக் கருதப்படுகின்றன. பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிற்பம் புத்தர் இல்லை என்பதையும், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு பௌத்தத்தின் பெருமை பேசுகின்ற கல்வெட்டு என்பதையும் களப்பணி மூலம் அறிய முடிந்தது. மகாமகம் கொண்டாடப்படும் இவ்வினிய வேளையில் கும்பகோணத்தில் பௌத்தம் தொடர்பான இச்சான்றுகளைக் காண்போம். கும்பகோணம் பகவ விநாயகர் கோயில் ...