Posts

Showing posts from December, 2015

பௌத்த சுவட்டைத் தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்

Image
பௌத்த சுவட்டைத் தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்  தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பௌத்த ஆய்வின்போது 16 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1993இல் பௌத்த ஆய்வில் அடியெடுக்கும்போது இவ்வாறாகத் தேடல் முயற்சி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. மயிலை சீனி வேங்கடசாமியை அடியொற்றியும், பின் வந்த அறிஞர்களைத் தொடர்ந்தும் சென்ற வகையில் பல இடங்களில் சிலைகளைக் காணமுடிந்தது. தமிழகத்தில் இக்காலகட்டத்தில் இவ்வாறாக அதிக எண்ணிக்கையில் இப்பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என் எண்ணம். பௌத்த ஆய்விற்கு வழிவகுத்துத் தந்த  தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நன்றியோடு, நினைவுகூர்ந்து,  என் ஆய்விற்குத் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றிகூறி    களத்திற்கு அழைக்கின்றேன்.   களப்பணி மிக எளிதாக இருக்கும் என எண்ணி களத்தில் இறங்கினேன். இறங்கியபின்னர்தான் அதிலுள்ள சிரமங்களை அறியமுடிந்தது. சில இடங்களில் உள்ளூர் மக்கள் தாமாகவே முன்வந்து உதவினர். சில இடங்களில் போதிய உதவி கிடைக்கவில்லை. பல இடங...