பௌத்த சுவட்டைத் தேடி : விக்ரமம்
1999இல் பார்த்த ஒரு புத்தர் சிலையை மறுபடியும் பார்க்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்களைக் காண தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விக்ரமம் செல்வோம், வாருங்கள். 29 ஜனவரி 1999 விக்ரமம், பள்ளிவிருத்தி, பூதமங்கலம் களப்பணி சென்றபோது விக்ரமம் களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை-மதுக்கூர் பேருந்தில் சென்று, மதுக்கூரிலிருந்து ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இரண்டு கிமீ தொலைவில் உள்ள விக்ரமம் சென்றேன். விசாரித்து, புத்தர் சிலை இருந்த இடத்திற்குச் சென்று, புத்தரைப் பார்த்தேன். போதிய நேரமின்மையால் உரிய விவரங்களைச் சேகரிக்கமுடியவில்லை. 13 பிப்ரவரி 1999 மறுபடியும் விக்ரமம். தோப்பில் இருந்த புத்தரைக் காண திரு சண்முகவேல் உதவி செய்தார். இச்சிலையை செட்டியார் சிலை என்றும், சிலை இருக்கும் இடத்தை புத்தடி செட்டிக்கொல்லை என்றும் கூறினார். அவரது தாயார் திருமதி பாக்கியத்தம்மாள் (72) அந்த புத்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறினார். "வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கலின்போது தேங்காய் உடைத்து சாம்பிராணி போடுவோம். முதலில் எண்ணெய் எடுக்கும்போது புத்தருக்கு சாத்திவிட்டே பயன்படுத்துவோம்...அவ்வப்போது வேண்டு...