தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர்
------------------------------------------------------------------------------------------- இவ்வார ராணி (3.5.2015 நாளிட்ட) இதழில் வெளியான எனது இருபதாண்டு கால ஆய்வு தொடர்பான பதிவைப் புத்த பூர்ணிமா வையொட்டி பகிர்வதில் மகிழ்கின்றேன். இதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. என் ஆய்வுக்குத் தடம் அமைத்துத் தந்த தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ------------------------------------------------------------------------------------------- அரண்மனையைத் துறந்தவர்...துறவறம் பூண்டவர இளவரசர் கௌதம புத்தர். அவரது பௌத்த மதம் ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது. அவருடைய சிலைகளை தேடுவதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வேள்வியாக செய்து வருகிறார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் ஜம்புலிங்கம். அவரது அனுபவங்கள்: "நான் 'எம்ஃபில் ' பட்டத்துக்காக கல்கியின் ' பொன்னியின் செல்வன் ' நாவல் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினேன். ஆனால், ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருந்தது. தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந...