மீசை வைத்த புத்தர்! சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

மீசை வைத்த புத்தர்! சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்! புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என்பது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஒரு பயணம்! வயற்காடுகள், ஆற்றங்கரைகள், இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அவ்வளவாகப் படாத கிராமங்கள் என்று சோழநாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பயணித்திருக்கிறேன். அந்தப் பயணத்தின் விளைவாகக் கண்டுபிடித்தவைதான் 65 புத்தர் சிலைகள். எதிர்கொண்ட இனிய அனுபவங்கள் மட்டுமல்ல, எத்தனையோ தோல்விகளும் ஏமாற்றங்களும் அலைச் சல்களும் சேர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகளை எனக்கு அவ்வளவு முக்கியமாக ஆக்குகின்றன. புத்தர் சிலை களைக் கண்டுகொண்ட தருணங்களைப் போலவே புத்தர் சிலைகள் என்று நம்பப்பட்ட சிலைகள் புத்தர் சிலைகள் அல்ல என்று கண்டறிந்த தருணங்களும் முக்கிய மானவை. தொடங்கிய இடம் 1993-ல் பௌத்தம் தொடர்பான ஆய்வில் கால்பதித்தபோது, ஆய்வுகள்தானே சர்வசாதாரணமாக முடித்துவிடலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. இலக்கியச் செய்திகளையும், தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து நிறைவுசெய்துவிடலாம் என்ற...